இந்திய கிரிக்கெட் அணியை வம்பிழுப்பது என்றால் பாகிஸ்தான் வீரர்களுக்கு அலாதி பிரியம். எப்பொழுதுமே தேவை இல்லாததை பேசி சாக்கடையில் கல்லெறிந்து மாட்டிக்கொள்வார்கள். இப்படி பலமுறை நடந்திருக்கிறது குறிப்பாக, அப்துல் ரசாக், சாஹித் அப்ரிடி, சோயப் அக்தர், ஹாரிஸ் ராஃப் போன்ற வீரர்களுக்கு இது பொருந்தும்.
இப்பொழுதும் அப்படி ஒரு தேவையில்லாத வார்த்தையை விட்டு இந்திய அணியில் வளர்ந்து வரும் 14 வயது பாலகனான வைபவ் சூரியவன்சி மீது வன்மத்தை கக்கி இருக்கிறார் பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ராஃப் . அப்படி அந்த குழந்தை என்ன தப்பு செய்தது என்று தெரியவில்லை.
வைபவ் சூரியவன்சி ஐ பி எல் போட்டிகள் விளையாடினார். வெறும் 14 வயதான இந்த தம்பி அந்தத் தொடரில் பல சாதனைகள் நிகழ்த்தினார். மிகவும் அதிரடியாக ஆடக்கூடிய திறமை படைத்தவர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவர் குறைந்த பந்துகளில் செஞ்சுரி அடித்து ஆச்சரியப்படுத்தினார்.
இப்பொழுதும் இங்கிலாந்து அண்டர் 19 தொடரில் அசத்தி வருகிறார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 300க்கு குறைவதே கிடையாது. அந்த அளவுக்கு தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இப்பொழுது இதுதான் பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ராஃப்க்கு வயிற்று எரிச்சலையும், பொறாமையையும் ஏற்படுத்தி உள்ளது.

ஹாரிஸ் ராஃப் ,எப்பொழுதும் இந்தியாவுடன் விளையாடும் போது அவர் வீசும் பந்துகளை நமது வீரர்கள் அடித்து நொறுக்குவார்கள். எல்லா போட்டிகளிலும் 10 ஓவர்கள் வீசி 80, 90 ரன்கள் கொடுக்கக்கூடிய வீரர். இப்பொழுது அவர் தான் பொறாமையில் பொங்கி அந்தப் குழந்தையை அசிங்கப்படுத்தி வருகிறார். பொடி பையன் முதல் பந்திலேயே அவனது ஹெல்மெட்டை நொறுக்குவேன் என கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணி வருகிறார்.