கமலின் நட்புக்காக ரஜினி எடுத்த அதிரடி முடிவு.. கமல் Ok சொன்ன விஷயம்

Kamal : சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து உலக நாயகன் என்ற பட்டத்தையும் பெற்று, ஒரு மதிப்பு மிக்க நடிகராக சினிமாவில் வலம் வருபவர் கமலஹாசன். ஆனால் சில காலமாகவே கமலை பற்றிய விமர்சனம் வலைதளத்தில் அதிகம் தென்படுகிறது

1996 ஆம் ஆண்டு கமல் நடித்த இந்தியன் திரைப்படம் யாரும் எதிர்பாராத வகையில் பயங்கரமான வெற்றியை கொடுத்தது. ஒரு இந்திய சுதந்திரப் போராளி, லஞ்சம் வாங்கும் மனிதர்களை தூய்மைப்படுத்தும் பணியில் இறங்குகிறான். போலீஸ் தேடுதல் வேட்டையில் ஈடுபடுகிறது.

ஊழலை எதிர்த்து ஈடுபடும் அனைவரையும் கொள்ளும் வயதான தாத்தாவாக கமல் இந்த கதாபாத்திரத்தில் நடித்தது தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் இடம் பிடித்தது. இந்த திரைப்படத்தில் கமல் இரண்டு வேடங்களில் நடித்திருப்பதும், சினிமா வட்டாரத்தை ஆச்சரியப்படுத்தியது.

சங்கரின் இயக்கத்தில் உருவான இந்தியன் திரைப்படம் எப்படி வெற்றி கொடுத்ததோ.. அதேபோல் இந்தியன் பாகம்-2 எடுத்தால் நிச்சயம் வெற்றி பெறும் என எண்ணி, 2024-இல் அதே கதையை சற்று வித்தியாசமாக திரையில் வெளியிடுகிறார். ஆனால் இந்தியன்-2 திரைப்படம் வெளியாகி மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

ரஜினியின் சப்போர்ட்..

மனம் தளராத கமல் மணிரத்தினத்தின் Thuglife திரைப்படத்தில் நடித்தார். அவருக்கு என்ன நேரமோ தெரியவில்லை அந்த திரைப்படமும் அவரை கைவிட்டது. வலைத்தளங்களில் விமர்சனத்திற்கு ஆளானது தான் மிச்சம். அதன்பின் அரசியலைப் பற்றி யோசித்து, கமல்ஹாசன் இப்போது மக்கள் குறைகள் மற்றும் அரசுகளின் தவறுகள் மீது விமர்சனம் செய்து வருகிறார்.

கமலஹாசனின் இந்தியன்-3 திரைப்படத்தை தொடங்க ரஜினிகாந்த் முன்வந்துள்ளார். லைக்கா உடன் சங்கர் மற்றும் கமல் கலந்துரையாடி இந்த திரைப்படத்திற்கு சம்பளம் இல்லாமல் எடுப்பதாக ஓகே சொல்லிவிட்டனர். படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.