சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் பல சிக்கல்களைத் தாண்டி மீண்டும் சூட்டிங் நடைபெற்று வருகிறது. முதல் முதலாக ஜெயம் ரவி வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் சூட்டிங் இலங்கை கொழும்புவில் நடைபெற்ற நேரத்தில் பிரச்சனையில் சிக்கியது.
இந்த படத்தை தயாரிக்கும் டான் பிக்சர்ஸ் நிறுவனம் அமலாக்க துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டு ரெய்டு செய்யப்பட்டது. இதனால் அவர்கள் தயாரிக்கும் படம் எல்லாம் அப்படியே நின்று போனது. அடுத்தடுத்து லிஸ்டில் இருக்கும் படங்களும் ஆட்டம் கண்டது.
பராசக்தி படம் வருகிற 2026 பொங்கலுக்கு ரிலீஸ் என்று கூறிய போதிலும் இந்த பிரச்சனையால் படம் ரிலீஸ் ஆகுமா என கேள்வி எழுந்தது. ஏற்கனவே 40 சதவீதம் படத்தை முடித்திருந்தார் இயக்குனர் சுதா கொங்காரா. பண பிரச்சனை காரணமாக நின்னு போன நேரத்தில் கூட எடிட்டிங் வேலையை முடித்து விட்டாராம்.
இந்தப் படத்தின் தியேட்டர்கள் விநியோக உரிமையை வாங்கிய ரெட் ஜெயன்ட் மூவிஸ் இதை பொங்கலுக்கு ரிலீஸ் செய்தாக வேண்டும் என கட்டளை போட்டுள்ளது. அதனால் போர்க்கால அடிப்படையில் சூட்டிங் நடைபெற்று வருகிறது. விஜய்யின் ஜனநாயகன் படமும் பொங்கலுக்கு தான் ரிலீஸ் ஆகிறது.
ஜனநாயகன் படம் 2026 ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸ் ஆகிறது. சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் ஜனவரி 14ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இரண்டு படங்களுக்கும் குறைந்தது நான்கு நாட்கள் இடைவெளி இருக்கிறது. ஏற்கனவே விஜய்யின் அடுத்த அவதாரம் சிவகார்த்திகேயன் தான் என கூறிவரும் நிலையில் இருவரும் ஒருவருக்கொருவர் நேராக மோதிக்கொள்ளவில்லை.