தென்னிந்திய நடிகர்களின் புகழ் தற்போது இந்தியா முழுவதும் பரவி உள்ளது. பாலிவுட் மார்க்கெட்டில் சிலர் பான் இந்தியா ஹீரோக்களாக மாறி, சிலர் இன்னும் மாஸ் காட்ட காத்திருக்கிறார்கள்.
ரஜினிகாந்த், விஜய், கமல்ஹாசன்: இந்த மூவரும் பண்டிகை ரிலீஸ் என்றாலே ஹிந்தி பேசும் பகுதிகளிலும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தக்கூடிய சூப்பர் ஸ்டார்கள். ரஜினியின் ரோபோ, ஜெயிலர், கபாலி போன்றவை ஹிந்தியில் செம்ம வரவேற்பைப் பெற்றன. விஜய்யின் தெறி, மெர்சல், மாஸ்டர் படங்கள் மாஸ் ரசிகர்களை கவர்ந்தன. கமலின் இந்தியன், விக்ரம், தசாவதாரம் ஆகியவை ஹிந்தி டப்பிங்கிலும் பிரமாண்ட ஹிட் ஆனவை.
சூர்யா, தனுஷ், மாதவன்: இவர்கள் மூவரும் ஹிந்தி ரசிகர்களிடையே கதையின் மீதான நம்பிக்கையை உருவாக்கிய ஹீரோக்கள். ஜெய் பீம், ரஞ்சனா, ராக்கெட்ரி போன்ற படங்கள் இவர்களை மெல்லிய ஆனால் உறுதியான இடத்தில் நிறுத்தியுள்ளது. ஹிந்தி மார்க்கெட்டில் ஆர்ட் மற்றும் கான்டென்ட் சார்ந்த ஹீரோக்களாக இவர்களுக்கு தனி அடையாளம் உள்ளது.
அல்லு அர்ஜுன் புஷ்பா படத்துக்குப் பிறகு ஹிந்தி பார்வையாளர் களிடையே மாஸ் ஹீரோவாக உயர்ந்தார். அவரது ஸ்டைல், நடிப்பு, டயலாக் எல்லாம் ஹிந்தி மக்களை கவர்ந்தது. ஜூனியர் என்.டி.ஆர்-ன் RRR வெற்றி, மற்றும் எதிர்பார்க்கப்படும் War 2 ஆகியவை அவரை பான் இந்தியா லெவலுக்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபாஸ், பாகுபலி, சாஹோ, ஆதி புருஷ், சலார் போன்ற பான் இந்தியா படங்களின் மூலம் ஹிந்தி மார்க்கெட்டில் மாஸ் ஹீரோவாக மாறினார். யாஷ், KGF படங்களின் இரு பகுதிகளாலும் ஹிந்தி பேசும் பகுதியிலேயே தனக்கென ஒரு பேரரசை உருவாக்கினார். தற்போது வரும் ராமாயணம் மற்றும் டாக்ஸிக் படங்கள் அவரை இன்னும் உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும்.
பாலிவுட் மார்க்கெட்டில் தென்னிந்திய ஹீரோக்களின் தாக்கம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. ரசிகர்கள் அவர்களை பான் இந்தியா ஹீரோக்களாக ஏற்றுக் கொண்டிருப்பது மிகப்பெரிய சாதனை.