குட்டிக்கரணம் ரிஷப் பண்ட்துக்கு கும்மி அடித்த மருத்துவர்கள்.. குஜராத் உறவுக்கு மகுடி ஊதும் சுப்னம் கில்

ஆஸ்திரேலியா ஓவல் மைதானத்தில் நடந்து வரும் நான்காவது டெஸ்ட் போட்டி தான் ரிஷப் பண்ட்துக்கு இந்த சீசனில் கடைசி போட்டி. முதல் இன்னிங்ஸில் களமிறங்கி அவருக்கு கால் விரல் எலும்பு முறிவு ஏற்பட்டது(toe fracture) க்ரிஷ் போக்ஸ் பந்தை ஸ்வீப் அடிக்க முயற்சி செய்தபோது காலில் அடிபட்டு ரிட்டையர்டு ஹர்ட் ஆனார்.

இனிமேல் மீதமுள்ள போட்டிகளில் விளையாட மாட்டார் என செய்திகள் வந்தது. ஆனால் இந்த போட்டியில் மீண்டும் கால்களை நொண்டிக்கொண்டு விளையாட வந்தார். முக்கியமான கட்டத்தில் இந்திய அணி இருந்ததால் காயத்தையும் பொறுப்பெடுத்தாமல் விளையாடினார்.

மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப் போகிறார்கள். குறைந்தது 6 முதல் 8 மாதங்கள் இனிமேல் விளையாட மாட்டார். மருத்துவர்கள் ஒரு வருட காலத்திற்கு அவரை ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். இதனால் கடைசி டெஸ்ட் போட்டி விளையாடுவதற்கு இரண்டு தமிழக வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே ரிசர்வ்டு விக்கெட் கீப்பர் துருவ் ஜுரல் அங்கே இருக்கிறார். அவ்வப்போது அவர் சப்ஸ்டிட்யூட்டாக செயல்பட்ட போதிலும் அவரது பங்களிப்பு திருப்திகரமாக இல்லை. இதனால் தமிழக வீரர் கே எஸ் பரத் பெயரை பரிந்துரைத்து வருகிறார்கள்.

கேப்டன் கில் கே எஸ் பரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அவரின் தலைமையில் ஐபிஎல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய மற்றொரு தமிழக வீரரான நாராயண ஜெகதீஷை பரிந்துரைத்து வருகிறார். கில் ஆதரவு இவருக்கு இருப்பதால் பரத்துக்கு பதிலாக இவர் சேர்க்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.