SK இடத்தை தட்டி பறித்த பிரபலம்.. கடைசியில் நடந்தது இதுதான்

Cinema : சினிமாவில் எந்த திரைப்படம் டாப் இடத்தை பிடித்தாலும் அந்த படத்தை வேறொரு மொழியில் ரீமேக் செய்வதே இயக்குனர்களின் தற்போதைய வேலை. ஏற்கனவே சினிமாவில் இருக்கும் டாப் படங்களை ரீமேக் செய்து பிரபல நடிகர்களை நடிக்க வைத்தால் படம் கலெக்ஷனில் அள்ளும் என்பது இன்னொரு எண்ணமாக இருக்கிறது.

புதிய களம்..

Court State vs A Nobody என்ற இத்திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி பயங்கரமான வரவேற்பை கொடுத்தது. ராம் ஜெகதீஸ் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம், 19 வயது யுக்தமாக குற்ற சாட்டில் சிக்கியவனை சட்டத்தில் முன்னிலை படுத்தும் வகையில் கதை எடுக்கப்பட்டிருக்கிறது.

SK இடத்தை பிடித்த பிரபலம்..

தற்போது இந்த தெலுங்கு திரைப்படம் ரீமேக் செய்யவுள்ளனர். யார் ஹீரோ என்று தான் ஆவலோடு பேசி வருகிறார்கள். இன்று ஒரு புதிய தகவல் கிடைத்துள்ளது. இப்படத்தில் பிரஷாந்த் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

ஆனால் முதலிலேயே இந்த திரைப்படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் தான் தேர்வாகினார். ஆனால் பிரசாந்தன் அப்பா தியாகராஜை வைத்து இந்த திரைப்படத்தில் ஒப்புதல் வாங்கியுள்ளார். சினிமா வட்டாரத்தில் இது பேசும் பொருளாகவே மாறியுள்ளது.

பிரசாந்த் என்னதான் சாக்லேட் பாயாக இருந்தாலும், தற்போது சிவகார்த்திகேயன் தான் இளைஞர்கள் மனதில் இடம் பிடித்த ஒரே ஹீரோ. இவரை நம்மால் விட்டுக் கொடுக்க முடியுமா என்று தற்போது ரசிகர்கள் மத்தியில் பேச்சு எழுந்து வருகிறது.

இதை விட ட்விஸ்ட் என்னவென்றால், இந்த திரைப்படத்தில் தேவயானி மகள் இனியா தான் கதாநாயகியாக நடிக்க இருக்கிறாராம். தேவயானி மகளுக்கு அவருக்கு கிடைத்த அதே மதிப்பும், வரவேற்பும் சினிமாவில் கிடைக்குமா என்று தெரியவில்லை.