சத்யராஜை பற்றி ஓபன் டாக்.. சீக்ரெட் விஷயத்தை உலறிய சுருதிஹாசன்

Shruthi haasan : உலக நாயகன் பட்டத்தை வென்று இன்றளவிலும் சினிமாவில் இருந்த ஓய்வெடுக்காமல் நடித்தவரும் கதாநாயகன் கமலின் மகள் தான் ஸ்ருதிஹாசன். ஸ்ருதிஹாசன் தற்போது ஒரு சீக்ரெட் விஷயத்தை பற்றி கூறியிருப்பது வைரலாகி வருகிறது.

சினிமா உலகில் ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் தனது இசையிலும் புலமை வாய்ந்தவர். சினிமாவில் 3 திரைப்படத்தில் தனுஷுடன் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். ஆனால் அதே சமயம் பல கிசுகிசுக்களில் சிக்கிய நடிகைகளில் ஒருவர்.

வெளிவந்த உண்மை..

தற்போது வலைத்தளத்தை திறந்தாலே ரஜினியின் கூலி படத்தைப் பற்றின அப்டேட் தான் எப்போது பார்த்தாலும் வந்து கொண்டே இருக்கிறது. இது போதாது என்று லோகேஷ் கனகராஜின் இன்டர்வியூவும் பயங்கரமாக வைரல் ஆகி வருகிறது.

375 கோடியில் தலைவரின் படம் உருவாவது என்பது சும்மாவா! திரைப்படம் அதிரடி கிளப்ப போகிறது என்பது மட்டும் உறுதி. சூப்பர் ஸ்டாரின் 171 வது திரைப்படம் என்பது கேட்பவர்கள் அனைவருக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கும்.

இந்த வயதிலும் சினிமாவை விட்டுக் கொடுக்காமல், சூப்பர் ஸ்டார் பட்டத்தை விட்டுக் கொடுக்காமல் உழைத்து வரும் ஒரே நடிகர் நம்ம ரஜினி சார் மட்டும் தான். மேலும் கூலி திரைப்படத்தில் முக்கிய பிரபலங்கள் நடித்திருப்பதாக தகவல்கள் வந்தது.

சத்யராஜ் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சும்மா டம்மி கதை பாத்திரம் இல்லை அதுவும் பவர்ஃபுல்லான கதாபாத்திரமாம். தற்போது ஸ்ருதிஹாசனின் பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.

” நான் கூலி திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் தான் நடிக்கிறேன். அதுவும் சத்யராஜின் மகளாக நடிப்பது எனக்கு மிகவும் பெருமை- ஸ்ருதிஹாசன் ” இப்படி ஸ்ருதிஹாசன் கூறியிருப்பது மேன்மேலும் கூலி திரைப்படத்தை பற்றிய சுவாரசியங்களை உருவாக்கி வருகிறது.