Simbu: வெற்றிமாறன், தனுஷ் கூட்டணி எப்பொழுது இணையும் என ரசிகர்கள் ஒரு பக்கம் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதேபோல் வட சென்னை 2 அப்டேட் வேண்டும் என தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.
சூர்யா ரசிகர்கள் வாடிவாசல் அப்டேட் கேட்கின்றனர். ஆனால் வெற்றிமாறன் சத்தம் இல்லாமல் சிம்புவுடன் ஒரு படத்தை தொடங்க தயாராகி விட்டார். இதன் ப்ரோமோ சூட் கூட முடிந்துவிட்டது.
விரைவில் சூட்டிங் ஆரம்பிக்கப் போகிறார்கள். ஆனால் தயாரிப்பாளர் இப்போது கையை பிசையும் நிலையில் இருக்கிறார். ஏனென்றால் சிம்பு தனக்கு 45 கோடி சம்பளம் வேண்டும் என கராராக கேட்கிறாராம்.
கையை பிசையும் தயாரிப்பாளர்
ஏற்கனவே வாடிவாசல் படத்திற்காக கலைப்புலி தாணு வெற்றிமாறனுக்கு 20 கோடி சம்பளம் கொடுத்திருக்கிறார். ஆனால் அந்த படம் தாமதமாகும் நிலையில் இந்த படத்திற்காக அது பயன்படுத்திக்கொள்ள உள்ளார்.
இதில் சிம்பு வேறு இவ்வளவு தொகை கேட்டால் என்னதான் செய்வார். மொத்த படமே நூறு கோடிக்குள் முடிக்க வேண்டும் என்பதுதான் திட்டம். அதேபோல் சிம்புவின் படத்துக்கு மிகப்பெரிய அளவில் பிசினஸ் வரும் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது.
மேலும் படம் தொடங்குவதற்கு முன்பு சிம்பு லாபத்தில் ஒரு பங்கு தான் கேட்டிருந்தார். ஆனால் இப்போது சம்பளத்தொகை கேட்பதால் தாணு சிம்புவுக்கு 20 கோடி கொடுத்து படத்தை தொடங்குவதற்கு முடிவு செய்து இருக்கிறாராம்.
இது ஒரு பக்கம் இருக்க இந்த பிரச்சனையால் படம் டிராப் ஆகிவிட்டது என்ற ஒரு செய்தியும் பரவி வருகிறது. எதுவாக இருந்தாலும் இன்னும் சில வாரங்களில் முடிவு தெரிந்துவிடும் என்கிறது திரையுலாக வட்டாரம்.