இங்கிலாந்தில் ஓய்வு பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விளையாடும் உலக சாம்பியன்ஷிப் டி20 லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பிரச்சனை காரணமாக இந்த தொடரில் யுவ்ராஜ் சிங், சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோர் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட மாட்டோம் என அறிவித்திருந்தனர்.
அதனால் இந்தியா, பாகிஸ்தான் போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற தொடரில் பாகிஸ்தான் சிறப்பாக விளையாடி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றது.
அதைப்போல் இந்திய அணியும் 4வது இடத்தை பிடித்து செமி ஃபைனலுக்கு முன்னேறியது. விதிமுறைப்படி முதலிடம் பிடித்த பாகிஸ்தானுக்கு எதிராக 4வது இடத்தை பிடித்த இந்தியாவும் முதல் செமி பைனல் போட்டியில் விளையாட வேண்டிய சூழ்நிலை உருவானது.
அதனால் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் எல்லோரும் (குறிப்பாக (சாகித் அப்ரிடி) இப்பொழுது இந்தியா எந்த முகத்தை வைத்துக்கொண்டு அரை இறுதி போட்டியில் விளையாடும் என ஏளனமாய் கூறினார்கள். இந்தியா தான் எங்களுக்கு உயிரென போட்டியை விட்டுக் கொடுத்தார்கள் யுவராஜ் சிங் படையினர்.
விளையாடாமல் “walk over”முறைப்படி பாகிஸ்தான் பைனலுக்கு முன்னேறியது. ஏற்கனவே ஆஸ்திரேலியாவை தோற்கடித்து தென்னாப்பிரிக்கா பைனலுக்கு முன்னேறி இருந்தது . இவர்களுக்கு இடையே நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா கோப்பையை வென்றது.