Simbu: சிம்பு, வெற்றிமாறனுடன் இணைய போகிறார் என்ற செய்தியை கேள்விப்பட்டதும் அவருடைய ரசிகர்களுக்கு அவ்வளவு சந்தோஷம். அதுவும் வட சென்னை சீரிஸ் என வெளியான தகவல்கள் அவர்களை கொண்டாட வைத்தது.
அதற்கான ப்ரோமோ சூட் கூட முடிந்துவிட்டது. இதோ வெளியாகும் அதோ வெளியாகும் என செய்தியும் ஒரு பக்கம் வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் கடந்த சில வாரங்களாக இது பற்றிய எந்த அறிவிப்பும் இல்லை.
என்ன இப்படி கிணற்றில் போட்ட கல்லு மாதிரி இருக்காங்க என வெளிப்படையாகவே ரசிகர்கள் பேச தொடங்கி விட்டனர். அப்படி என்னதான்பா நடக்குது என விசாரித்து பார்த்ததில் இந்த படம் ட்ராப் ஆகிவிட்டது என்று அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
சிம்பு வெற்றிமாறன் படம் என்ன ஆச்சு.?
இதற்கு காரணம் சிம்பு தான் என்பது கூடுதல் அதிர்ச்சி. அதாவது இந்த ப்ராஜெக்ட்டுக்குள் அவர் வரும்போது படம் வெளியான பிறகு லாபத்தின் அடிப்படையில் ஒரு ஷேர் வாங்கிக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
ஆனால் திடீரென என்ன நினைத்தாரோ தெரியவில்லை ஒரு பெரிய தொகையை சொல்லி அந்த சம்பளத்தை கொடுத்தால் தான் நடிப்பேன் என கராராக பேசியிருக்கிறார். ஆனால் தயாரிப்பாளர் தாணு இந்த சம்பளத்தையும் சேர்த்து படத்தின் பட்ஜெட் என்று பார்த்தால் நூறு கோடியை தாண்டி விடும்.
அப்படியெல்லாம் என்னால் படம் எடுக்க முடியாது. இது என்னை நஷ்ட கணக்கில் தான் கொண்டு போய் விடும். அதனால் முடியாது என சொல்லி இருக்கிறார். இதுதான் இந்த பிரச்சனையின் மூல காரணம்.
தற்போது படம் டிராப் என தெரிந்து சிம்பு தரப்பில் இது குறித்து விசாரித்து இருக்கின்றனர். ஆனால் அவர்களோ டிராப் கிடையாது வேறு தயாரிப்பாளர் பார்த்து வருகிறோம் என சொல்லி இருக்கின்றனர்.
அதன்படி சித்தாரா என்டர்டைன்மென்ட் இப்படத்தை தயாரிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர். ஆனால் பேச்சுவார்த்தையில் தான் இருக்கிறது உறுதியாகவில்லை. எல்லாம் சரியாக வந்தால் மட்டுமே படம் தொடங்கும் இல்லை என்றால் அவ்வளவுதான் என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.