மூன்று சீரியலும் ஒன்றாக இணைய போகும் திரிவேணி சங்கமம்.. டிஆர்பிக்கு சன் டிவி போட்ட பிளான்

சீரியலுக்கு ராஜாவாக இருக்கும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் 18 சீரியலுக்கும் மக்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறார்கள். ஆனாலும் சாயங்கால நேரத்தில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான் டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகளை பெறுகிறது. அதனால் அந்த சீரியல்களை வைத்து டிஆர்பி ரேட்டிங்க்கு சன் டிவி பக்கவாக பிளான் போட்டு காய் நகர்த்துகிறார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் தான் மூன்று முடிச்சு மற்றும் மருமகள் போன்ற இரண்டு சீரியல்களையும் இணைத்து மகா சங்கமமாக கொண்டு வந்தார்கள். இதனால் டிஆர்பி ரேட்டிங்கிலும் அதிக புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் இருந்தது. இதனைத் தொடர்ந்து அடுத்து மூன்று சீரியல்களை ஒன்றாக இணைக்க போகும் சம்பவம் நடக்கப் போகிறது.

அதாவது பிரைம் டைமிங் இல் தற்போது ஒளிபரப்பாகும் அன்னம், கயல் மற்றும் மருமகள் இந்த மூன்று சீரியல்களும் ஒன்றாக வரப்போகிறது. ஏற்கனவே கயல் சீரியல் கொஞ்சம் டல் அடிக்கிறது, அன்னம் சீரியல் அதிரடியான காட்சிகள் வரப்போவதால் மருமகள் சீரியலையும் உள்ள கொண்டு வந்து ஒரு தரமான சம்பவத்தை கொடுத்து மற்ற சேனலுக்கு டாப் கொடுக்கும் விதமாக சன் டிவி அடுத்தடுத்த பிளானை கொண்டு வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து சிங்கப்பெண், எதிர்நீச்சல் 2, ஆடுகளம் போன்ற மூன்று சீரியல்களும் இணைந்து அடுத்து திரிவேணி சங்கமமாக வரப்போகிறது. இனி இதுதான் டார்கெட் என்று சொல்லும் வகையில் ஒவ்வொரு மாதமும் இந்த மாதிரி ஒரு வாரத்திற்கு சீரியல்களை இணைத்து கொடுக்கப் போகிறார்கள்.