டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் இடத்தை நிரப்புவதற்கு தேர்வு நடைபெற்று வருகிறது. விராட் கோலி இடத்தை ஓரளவு சுப்மன் கில் சமாளித்து வருகிறார் ஆனால் ரோகித் சர்மாவின் இடம் தான் இப்பொழுது தலைவலியாய் இருக்கிறது.
கருண் நாயர் மற்றும் சாய் சுதர்சன் இவர்கள் இருவரில் யாராவது ஒருவர் அவரது இடத்தை நிரப்புவார் என சோதனை செய்யப்பட்டது ஆனால் இருவருமே அதற்கு சரிப்பட்டு வரவில்லை, இப்பொழுது இந்த இடத்திற்கு புது வீரர் மீது பார்வை விழுந்துள்ளது.
கௌதம் கம்பீர் மற்றும் கங்குலி இருவரும் ஒரு தமிழக வீரருக்கு ஆதரவு கொடி வீசுகிறார்கள். ஆனால் அவருக்கு 29 வயதாகிவிட்டது. கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கிறார். பெங்கால் அணிக்காக விளையாடி வரும் அபிமன்யு ஈஸ்வரன் இந்திய அணியின் கதவை தட்டுகிறார்.
103 முதல் தர போட்டிகளில் விளையாடிய அவர் கிட்டத்தட்ட 7000 ரன்களுக்கு மேல் குவித்து சராசரியாக 48.70 வைத்திருக்கிறார். கடந்த நான்கு வருடங்களாக இந்திய அணியின் செலக்சன் கமிட்டி இவர் மீது கண் வைத்துள்ளது. ஆனால் வயது காரணமாக இவருக்கு சரிவர வாய்ப்பு கிடைக்கவில்லை.
கடந்த ஏழு வருடங்களாக அபிமன்யு ஈஸ்வரன் போராடிக் கொண்டிருக்கிறார். கௌதம் கம்பீர் அவரிடம், “உனக்கான வாய்ப்பு கட்டாயம் கிடைக்கும் போராட்டத்தை நிறுத்தி விடாதே என கூறியுள்ளாராம்” இப்பொழுது சாய் சுதர்சன் மற்றும் கருண் நாயர் இடத்திற்கு அபிமன்யு ஈஸ்வரனை வைத்து சோதித்துப் பார்க்க உள்ளனர்.