நினைத்துக்கூட பார்க்க முடியாததை செய்யும் கமல், தனுஷ்.. குடும்பத்துடன் அசுரன் காட்டும் அரவணைப்பு

இரண்டு வருடங்களுக்கு தனுஷ் கால்ஷீட் பிசியாக உள்ளது. அந்த அளவிற்கு விழுந்து விழுந்து நடித்து சம்பாதிக்கிறார். குடும்பத்தை பிரிந்து இப்படி வேலை வேலை என்று இருக்கிறார் என பல பேருக்கு தோன்றும், ஆனால் இன்றுவரை தன்னுடைய குடும்பத்தை மட்டுமல்ல, சுற்றி இருப்பவர்களையும் அரவணைத்து போகிறாராம்.

இவரை போலவே கமலும் வெளியில் தெரியாமல் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். மொத்தமாய் சம்பாதித்தத்தை எடுத்துச் செல்ல யாராலும் முடியாது. ஆனால் இவர்கள் இருவரும் சுற்றியுள்ளவர்களை அரவணைத்து போகும் பக்குவமான மனிதர்களாக இருக்கிறார்கள்.

தனுஷ் நடித்த முதல் படத்தில் அவருடன் சேர்ந்து நடித்திருந்தவர் அபிநை. இப்பொழுது இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அட்மிட் செய்துள்ளனர். கிட்னி மற்றும் லிவர் ஃபெயிலியர் என்கிறார்கள். இதை இரண்டு மாதங்களுக்கு முன்பே அறிந்த தனுஷ் அவர் மருத்துவ செலவிற்கு 5 லட்சம் கொடுத்து உதவியுள்ளார்.

அது மட்டும் இல்லாமல் தான் சம்பாதித்ததை மாதந்தோறும் தன்னுடைய அண்ணன், அக்கா, அப்பா போன்றவர்கள் பேங்க் அக்கவுண்டிற்கு ஒரு தொகையை அனுப்பி விடுவாராம். இப்படி உற்றார், உறவினர்களையும் தாங்கி வருகிறார். இதுபோக பொல்லாதவன் படத்திற்கு பிறகு ஒவ்வொரு மாதமும் வெற்றிமாறனுக்கு ஆறு லட்ச ரூபாய் அவர் வங்கி கணக்கில் போட்டு வருகிறாராம்.

கமல் தன்னுடைய ராஜ் கமல் ஆபீஸில் முன்பு டிசைனராக பணிபுரிந்த குமார் என்பவரை மருத்துவமனையில் அனுமதித்து அவர் சிகிச்சைக்காக பெரிதும் உதவியுள்ளார். அவர் இறப்பதற்கு முன்பு நடுராத்திரியில் அவர் வீட்டிற்கு சென்று பார்த்து ஆறுதல் கூறியிருக்கிறார். இவருடைய மகன் சுந்தரமூர்த்தி இப்பொழுது மியூசிக் டைரக்டராக ஒரு சில படங்களில் வேலை செய்துள்ளார்