கன்னடத்தில் கிஸ் (2019) மூலம் அறிமுகமான ஸ்ரீலீலா, தெலுங்கில் தமக்கா, காரம், பகவந்த் கேசரி போன்ற ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

தற்போது தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் உடன் பராசக்தி படத்தின் மூலம் அறிமுகமாகிறார். அதோடு அஜித் நடிக்கும் AK64 படத்திலும் நடிக்கும் வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஹிந்தியில் அனுராக் பாசு இயக்கத்தில் கார்த்திக் ஆரியனுடன் இணைந்து நடிக்கிறார். மேலும் தெலுங்கில் புஷ்பா 2- த ரூல் படத்தில் இடம்பெற்ற கிஸ்ஸிக் பாடல் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் தொடர்ச்சியாக படங்கள் செய்து, பான்-இந்தியா நடிகையாக உயர்ந்து வருகிறார்.

தற்போது இவர் கருப்பு நிற சேலையில் அழகிய போஸ் கொடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் கியூட், சூப்பர் என கமெண்ட் செய்து வருகின்றனர்.