இறங்கி வந்து இருவரையும் காப்பாற்றிய வெற்றிமாறன்.. குணத்தாலும் பண்பாலும் ஜெயித்த சிம்பு

வெற்றிமாறன் கேரன்டி இயக்குனர் என்பதால் இவரிடம் வந்த ப்ராஜெக்ட் எதுவும் ட்ராப் ஆகாது ஆனால் துரதிர்ஷ்டமாக சூர்யா நடிக்கவிருந்த வாடிவாசல் படம் தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது. இதற்கு பலதரப்பட்ட காரணங்கள் கூறினாலும் கூடிய விரைவில் நல்ல செய்தி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் வெற்றிமாறன் சிம்புவை வைத்து ஒரு படம் பண்ண போகிறார். வெற்றிமாறனின் கால் சீட் தயாரிப்பாளர் தாணுவிடம் இருந்துள்ளது. வாடிவாசல் படத்திற்காக ஒரு பெரும் தொகையை இவருக்கு தானு தரப்பிலிருந்து அட்வான்சாக கொடுக்கப்பட்டுள்ளது

இதனால் சிம்பு மற்றும் வெற்றிமாறன் கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது ஆனால் சிம்பு தரப்பிலிருந்து ஒரு பெருந்தொகையை சம்பளமாக கேட்டுள்ளார். 40 கோடிகள் வரை கேட்டதால் தயாரிப்பாளரால் அதை கொடுக்க முடியாது என இந்த ப்ராஜெக்ட் நிலுவையில் இருந்தது.

இப்பொழுது வெற்றிமாறன் பல படிக்கட்டுகள் இறங்கி போய் சிம்பு மற்றும் தயாரிப்பாளர் இடம் பேசி உள்ளார். இதனால் இதற்கு இப்பொழுது கிரீன் சிக்னல் கிடைத்துள்ளது. சொல்லப்போனால் சிம்புவையும், தானுவையும் காப்பாற்றியுள்ளார் வெற்றிமாறன்.

தயாரிப்பாளர் தானு பெரும் தொகையை வட்டி கட்டி வருவதாலும், சிம்பு, அடுத்தடுத்த ப்ராஜெக்ட்டுகள் நகராமல் கஷ்டப்படுவதாலும் இந்த முடிவு அவர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. தானுவை தன்னுடைய அப்பா ஸ்தானத்தில் வைத்திருக்கிறார் வெற்றிமாறன்.

சிம்பு தக்லைப் படம் முடிந்தவுடன் மணிரத்தினத்தின் மற்றொரு படம் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் இப்பொழுது வெற்றிமாறன் கூட்டணி கிடைத்ததால் மணிரத்தினத்திடம் தாமாக பேசி அதற்கு அவகாசம் கேட்டு வந்துள்ளார். இதனால் வெற்றிமாறனை மிகவும் கவர்ந்துவிட்டார் சிம்பு.