சமீபத்தில் வெளியான மதராஸி, தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி, டிஸ்ட்ரிபியூட்டர்கள், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் நல்ல லாபத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது.
குறிப்பாக, மதராஸி படம் வசூல், கதைக்களம் மற்றும் விமர்சனம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. திரையரங்குகள் வழங்கும் தகவலின்படி, மதராஸி படம் ரிலீஸான ஒரே வாரங்களிலேயே ₹50 கோடி கிளப்பில் நுழைந்துவிட்டது.
சென்னை சிட்டி, தமிழ்நாடு முழுவதும் ஸ்ட்ராங் ஹோல்ட் பிடித்து, இந்தியாவின் பிற மாநிலங்களிலும் நல்ல வசூல் பதிவு செய்துள்ளது. டிஸ்ட்ரிபியூட்டர்கள் படத்தை “Profitable Venture” என அழைக்கின்றனர்.
கதைக்களம்
மதராஸி ஒரு இன்டென்ஸ் ஆக்ஷன் டிராமா. சிம்பிளான லைனில் சொல்ல வேண்டுமென்றால் – சமூகத்தில் சாதாரண மனிதனாக வாழும் ஹீரோ, சூழ்நிலைகளால் மாறி, சாமான்ய மனிதர்களின் குரலாக மாறுகிறான். துப்பாக்கிக் கடத்தலை தடுப்பதற்காக சிவகார்த்திகேயன் எடுக்கும் பல முயற்சிகள் தான் இந்த படத்தின் கதை.. ஸ்கிரீன்ப்ளே முழுக்க thriller + mass elements கலந்து அமைக்கப்பட்டுள்ளது.
விமர்சனங்கள்
படம் வெளியானவுடன் விமர்சகர்கள், சிவகார்த்திகேயன் தனது கேரியரில் மாஸ் ஹீரோ லெவல் செட்டாகி விட்டார்.. மதராஸி படம் Rajini, Vijay, Ajith லைனில் நின்று பேச வைக்கும் தரமான ஹிட்டாகும்.. என பாராட்டுகளை பகிர்ந்துள்ளனர். ரசிகர்கள் சமூக வலைதளங்களில், #MadharaasiMass என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர்.
அடுத்த பெரிய ஸ்டார் – SK?
கூலியும், மதராஸி-யும் லாபத்தில் சென்றதன் மூலம், “Rajini, Vijay, Ajith பிறகு Kollywood-இன் அடுத்த Big Star நிச்சயம் Sivakarthikeyan தான்” என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது. டிஸ்ட்ரிபியூட்டர்கள் கூட, SK படம் வந்தால் திரையரங்குகள் நம்பிக்கையுடன் ஓடுகிறது என்கிறார்கள்.
மதராஸி படம் வசூலிலும், விமர்சனங்களிலும் வெற்றி பெற்றிருப்பது, சிவகார்த்திகேயன் கேரியரை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. ரசிகர்கள் இப்போது அவர் அடுத்த பட அறிவிப்புக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.