சிம்பு தனது அடுத்தடுத்த படங்களை தடாலடியாக அறிவித்தார். ஆனால் இப்போது வரை ஒன்று கூட கைகூடி வரவில்லை. மணிரத்தினத்தில் தக்லைப் கூட்டணிக்கு பிறகு அடுத்தடுத்து STR 49,50,51 என அப்டேட்களை அள்ளி வீசினார். இப்பொழுது மொத்தமாய் மோசம் போய் உள்ளார்.
பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தான் சிம்புவின் 49 வது படத்தை இயக்குவதாக இருந்தது. இந்த படத்தை டான் பிக்சர்ஸின் நிறுவனர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பதாக இருந்தார். ஆனால் அவர் தற்போது ED ரெய்டில் மாட்டிக் கொண்டதால் நிலைமை தலைகீழாக மாறியது.
சிம்பு இவருடன் சேர்ந்து பயணிப்பதற்கு ஒரு பிரேக் கொடுத்து விட்டார். இப்பொழுது வெற்றிமாறனுடன் சேர்ந்து ஒரு ப்ராஜெக்ட் என கூட்டணி போட்டுள்ளார். இதற்கிடையில் டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் படம் கேள்விக்குறியாக உள்ளது. அதை அப்படியே டீலில் விட்டு விட்டார் சிம்பு.
ஒரு கட்டத்தில் ஆகாஷ் பாஸ்கரனே சிம்புவிடம் இந்த படத்தை வேண்டாம் என்று கூறியிருக்கிறார். கொடுத்த அட்வான்சையும் திருப்பி கேட்டுள்ளார். அது மட்டுமில்லாமல் இவரை நம்பி STR 49 படத்திற்கு சந்தானத்தையும் கமிட் செய்துள்ளனர்.
சிம்பு, சந்தானம் இருவருக்கும் பெருந்தொகையை அட்வான்ஸாக கொடுத்துள்ளனர். சந்தானத்தின் அட்வான்சையும் சிம்புவிடம் வாங்கித் தரும்படி கூறி இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் இந்த படத்திற்கு பரம்மாண்ட பூஜை ஒன்றையும் போட்டுள்ளனர்.
ஆக மொத்தம் இதற்கே ஒரு பெரும் தொகையை இறக்கியுள்ளது டான் பிக்சர்ஸ் நிறுவனம். இப்பொழுது இந்த மொத்த காசையும் சிம்பு தான் கொடுக்க வேண்டும். இவரை நம்பி சந்தானத்திற்கு அட்வான்ஸ், படத்தின் பிரம்மாண்ட பூஜை என கல்லாவை கரைத்திருக்கிறார் ஆகாஷ் பாஸ்கரன்.