வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு கேட்ச் யாரும் புடிச்சிருக்க மாட்டாங்க

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் பிடித்த வேடிக்கையான கேட்ச் வைரலாகியுள்ளது.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

usman khawaja catchஇரு அணிக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் 27ம் திகதி தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்க தேச அணி 260 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி, சாஹிப் அல்ஹசன் மற்றும் மெஹெதி ஆகியோரின் பந்து வீச்சால் 217 ஓட்டங்களில் சுருண்டது.
இதனையடுத்து, இரண்டாவது இன்னங்சில் வங்கதேச அணி களமிறங்கி விளையாடியது.

usman khawajaஆஸ்திரேலியா சுழற்பந்து வீச்சாளர் அகர் பந்து வீச, வங்கதேச துவக்க ஆட்டக்காரர் சவுமிய சர்க்கார் பந்தை பவுண்டரியை நோக்கி பறக்க விட்டார்.
எனினும், பவுண்டரி அருகில் இருந்த Khawaja, எளிதாக பிடிக்க வேண்டிய கேட்ச்சை, நான்கு முறை தட்டி தட்டி இறுதியில் பந்து தரையை தொடுவதற்கு முன் பிடித்தார்.
தற்போது, குறித்த கேட்ச் இணையத்தில் வைரலாகியுள்ளது. இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி 1 விக்கெட் இழப்பிற்கு 45 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

Trending News