த்ரிஷாவுக்கு போட்டியாக களம் இறங்கும் 90ஸ் ஹீரோயின்.. 20 வருடத்திற்கு பிறகு விஜய்யுடன் ஜோடி போடும் நடிகை

தளபதி விஜய் லியோ திரைப்படத்தை முடித்த கையோடு, இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தன்னுடைய 68 ஆவது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். லியோ திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே, தளபதி 68 படத்தின் அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி விஜய்யின் ரசிகர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறது. மேலும் நடிகர் அஜித்திற்கு ஒரு மங்காத்தா போல் விஜய்க்கு இந்த படம் அமைந்துவிடும் என அவருடைய ரசிகர்கள் மிகப்பெரிய நம்பிக்கையை வைத்திருக்கின்றனர்.

இன்றைய காலகட்டத்தில் 2K கிட்ஸ்களுக்கு தளபதியின் மாஸ் மற்றும் கிளாஸ் பிடித்திருந்தாலும், 90ஸ் கிட்ஸ் களின் பேவரைட் என்பது இளைய தளபதியின் குறும்புத்தனமான நடிப்பும், அவருக்கென்று வொர்க் அவுட் ஆகும் சில ஹீரோயின்களுடனான கெமிஸ்ட்ரியும் தான். அந்த காம்போவில் வந்த படங்களை இன்று வரை யாராலும் மறக்க முடியாது. அந்த அளவுக்கு மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்திருக்கிறது.

Also Read:2வது பெரிய கட்சி நாங்க தான்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட விஜய் தரப்பு

அப்படி 90ஸ் கிட்ஸ் களின் பேவரைட் ஜோடியாக இருந்தவர்கள் தான் விஜய் மற்றும் திரிஷா. இவர்களுடைய நடிப்பில் வெளியான கில்லி திரைப்படம் இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த கூட்டணியை மீண்டும் தன்னுடைய லியோ படத்தின் மூலம் கொண்டு வந்து ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் வைத்தார்.

தற்போது அதே பாணியில் மற்றொரு 90ஸ் ஹீரோயினை களம் இறக்குகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. விஜய்யை வைத்து இயக்கும் தளபதி 68 படத்தில் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் ஹீரோயினான ஜோதிகா விஜய்யுடன் ஜோடி சேர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த அப்டேட் விஜய் ரசிகர்களுக்கு தற்போது டபுள் ட்ரீட்டாக அமைந்திருக்கிறது. விஜய் மற்றும் ஜோதிகா கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு சேர்ந்து நடிக்க இருக்கிறார்கள்.

Also Read:எல்லாத்துக்கும் கட்டையை போடும் விஜய்.. லியோ பட விஷயத்தில் வெறுத்துப் போன லோகேஷ்

தளபதி விஜய் மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான குஷி திரைப்படம் இன்று வரை 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் திரைப்படமாக இருக்கிறது. அந்த படத்தில் பார்த்த விஜய்யை மறுபடியும் பார்த்து விட வேண்டும் என்பதுதான் அவருடைய ரசிகர்களின் மிகப்பெரிய கனவாகவும் இருக்கிறது. குஷி படத்தில் வந்த சிவா மற்றும் ஜெனி கேரக்டரை மீண்டும் 20 வருடங்களுக்குப் பிறகு திரையில் பார்ப்பது என்பதெல்லாம் 90ஸ் கிட்ஸ்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் என்று கூட சொல்லலாம்.

ஏற்கனவே இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் வந்த நித்யா மேனன் கேரக்டரை ஜோதிகா தான் பண்ண வேண்டியது. ஜோதிகா படத்தில் இருந்து பாதியிலேயே விலகி விட்டார் எனவும், ஜோதிகா படத்தை ரிஜெக்ட் செய்து விட்டார் எனவும் பல தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்நிலையில் இந்த சூப்பர் ஹிட் ஜோடியை தளபதி 68 இல் மீண்டும் சேர்த்து வைக்க இருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.

Also Read:லியோவுக்கு எண்டு கார்டு, பூசணிக்காய் உடைக்கும் லோகேஷ்.. வேற லெவலில் வெளிவர உள்ள டீசர்