செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

தமிழ் நடிகர்கள் சிக்கி தவித்த 6 சர்ச்சைகள்.. கண்ணீர் விட்டு மன்னிப்பு கேட்ட நயன்தாரா

ஒரு சில விஷயங்கள், கருத்துக்கள் மற்ற துறையில் இருப்பவர்களை விட சினிமா துறையில் இருப்பவர்கள் செய்யும் போது, பேசும் போது பொது மக்களிடம் சீக்கிரம் ரீச் ஆகிவிடும். பல நேரங்களில் சினிமா துறையை சேர்ந்தவர்கள் சாதாரணமாக பேசும் விஷயங்கள் கூட மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பிவிடும்.

தமிழ் நடிகர்கள் கிளப்பிவிட்ட 6 சர்ச்சைகள்

1. தளபதி விஜய்: நடிகர் விஜயின் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம் புலி. சிம்பு தேவன் இயக்கத்தில் வந்த இந்த படத்தில் விஜய், பிரபு, ஸ்ரீதேவி, சுதீப், ஹன்சிகா மோட்வானி, சுருதி ஹாசன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் ரிலீஸ் தேதியை செப்டம்பர் 17 என்று அறிவித்த சிம்புதேவன் எவ்வித முன்னறிவிப்புமின்றி அக்டோபர் 1 க்கு மாற்றினார். இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் விஜய் அவருடைய பஞ்சுவாலிட்டி தப்பு என்று திட்டி விட்டார்.

Also Read: அடிமாட்டு விலைக்கு நடந்த வியாபாரம்.. ஆஸ்தான தயாரிப்பாளரை வைத்து காய் நகர்த்திய விஜய்

2.கமலஹாசன்: உலக நாயகன் கமலஹாசனின் வாழ்க்கையில் நடந்த பிரச்சினைகளிலேயே யாராலும் மறக்க முடியாத ஒன்று விஸ்வரூபம் ரிலீஸ் சமயத்தில் நடந்தது தான். முழுக்க தீவிரவாதத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் முஸ்லிம்கள் தவறாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாகவும், இதனால் மதக்கலவரம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறி பட ரிலீஸை தடை செய்ய நினைத்தனர். அப்போது கமல் இந்த படத்தை நான் டி டி ஹெச்சில் வெளியிடுவேன் என மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பினார்.

3.குஷ்பூ: நடிகை குஷ்பூ அரசியலுக்கு வந்ததில் இருந்ததே அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை கூறி வருகிறார். மேலும் இவர் அடிக்கடி அரசியல் கட்சியையும் மாற்றி வருகிறார். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு குஷ்பூ, பெண்கள் திருமணத்திற்கு முன்பு பாதுகாப்பான முறையில் உறவு வைத்து கொள்வது தவறில்லை என்று கூறியிருந்தார். இந்த சர்ச்சை கருத்து குஷ்பூவை கைது செய்யும் அளவிற்கு போனது.

Also Read: நஷ்டத்தை ஈடு கட்ட போகும் கமல்.. வாய்ப்புக்காக 7 வருடமாக காத்திருக்கும் இயக்குனர்

4.நயன்தாரா: நயன்தாரா என்றாலே எப்போதுமே சர்ச்சை தான். அவருடைய சினிமா கேரியரில் எந்த அளவுக்கு டாப்பாக இருக்கிறாரோ அந்த அளவுக்கு சர்ச்சையும் அவரை சுற்றியிருக்கும். ஒரு முறை நயன்தாரா சல்வார் அணிந்து திருப்பதி கோவிலுக்கு சென்றது மிகப்பெரிய சர்ச்சை ஆகி நயன் அதற்காக பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டார்.

5.கிருஷ்ணா: நடிகர் கிருஷ்ணா, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கழுகு, யாக்கை, யட்சன் படங்களின் மூலம் ஹீரோ ஆனார். இவர் இயக்குனர் விஷ்ணுவர்தனின் தம்பி ஆவார். இவர் ஹேமலதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மனைவி தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி ஒரு வருடத்திலேயே விவாகரத்து செய்து சர்ச்சை ஆனது.

6. சோனா: சோனா ஹெய்டன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் படங்களில் நடித்தவர். 2002 ஆம் ஆண்டு தென்னிந்திய அழகி போட்டியில் வெற்றி பெற்றவர் இவர். இப்போது கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர், ஒரு முறை வெங்கட் பிரபுவிடம் சம்பள பாக்கி வாங்க சென்ற போது, எஸ்பிபி சரண் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று பெரிய பிரச்சினையை கிளப்பினார்.

Also Read: உனக்கு நெஜமாவே அது இருக்கா.? நயன்தாராவை அவமானப்படுத்திய பிருந்தா மாஸ்டர்

Trending News