வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தோல்வி பயத்தில் சிவகார்த்திகேயன்.. பிரின்ஸ் படத்தால் முட்டிக்கொள்ளும் மாவீரன் டீம்

டாக்டர், டான் திரைப்படங்களை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் திரைப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன் ரிலீஸ் ஆனது. தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் மற்றும் உக்ரைன் நடிகை மரியா ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் சிவாவுக்கு தீபாவளி ரிலீஸ் ஆக அமைந்தது.

தன்னுடைய வழக்கமான காதல் கலந்த காமெடி பார்முலாவை பிரின்ஸ் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் எடுத்திருந்தார். ஆனால் டாக்டர், டான் படங்களை போன்று இந்த படம் சிவகார்த்திகேயனுக்கு கைகொடுக்கவில்லை. திரும்பும் பக்கமெல்லாம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

Also Read: ஒரே சமயத்தில் என்ட்ரி.. அகலக்கால் வைத்த டைமிங் நடிகரை பின்னுக்கு தள்ளி டாப் கியரில் சிவகார்த்திகேயன்

சில வருடங்களாக வெற்றியை மட்டும் சுவைத்து கொண்டிருந்த சிவாவுக்கு மீண்டும் தோல்வி பயத்தை காட்டிவிட்டது பிரின்ஸ் திரைப்படம். இதனால் செய்வதறியாது திகைத்து வருகிறார் சிவா. இந்த படத்தின் தோல்வியால் மீண்டும் கடனில் வேறு சிக்கிவிட்டார்.

பிரின்ஸ் திரைப்படத்திற்கு பிறகு சிவா, மாவீரன் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சக்தி டாக்கீஸ் தயாரிக்கும் இந்த படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். படத்தை அஸ்வின் இயக்குகிறார். அஸ்வின் ஏற்கனவே யோகி பாபுவை வைத்து மண்டேலா படத்தை இயக்கியவர். இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

Also Read: அடுத்தடுத்த வெற்றியால் உச்சாணி கொம்புக்கு சென்ற சிவகார்த்திகேயன்.. ஓவர் நைட்டில் சறுக்கி விட்ட பிரின்ஸ்

பிரின்ஸ் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் மாவீரன் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். படப்பிடிப்பும் நடந்து கொண்டிருக்கிறது. பிரின்ஸ் ரிலீசிற்கு பிறகு நடந்து கொண்டிருக்கும் படப்பிடிப்பில் சிவாவுக்கும் இயக்குனர் அஸ்வினுக்கும் இடையே மோதலாகவே இருந்து வருகிறதாம். அஸ்வின் கொஞ்சம் ஆட்டிட்யூட் கேரக்டர் என்பதால் இவரால் தான் பிரச்சனை என முதலில் பேசப்பட்டது.

ஆனால் இந்த மோதலுக்கு காரணமே சிவகார்த்திகேயன் தானாம். பிரின்ஸ் பட தோல்வியால் பயத்தில் இருக்கும் சிவா கதையை அப்படி மாற்றுங்கள், சீனை இப்படி வையுங்கள் என அஸ்வினை தொந்தரவு செய்வதுதான் இவர்களின் மோதலுக்கு காரணமாம். இதனால் மாவீரன் ஷூட்டிங் நிற்கும் அளவிற்கு பிரச்சனை கிளம்பியுள்ளது.

Also Read: மரண அடியை கொடுத்த பிரின்ஸ்.. அடுத்த படத்தை சமாளிக்க முடியாமல் திணறும் சிவகார்த்திகேயன்

Trending News