Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

லோகேஷ் கனகராஜுக்கு ரோலெக்ஸ் செய்ய போகும் கைமாறு.. ஒரு மாஸ் அப்டேட் வர போகுது போலையே!

லோகேஷ் கனகராஜுக்கு ரோலெக்ஸ் செய்ய போகும் கைமாறு.. ஒரு மாஸ் அப்டேட் வர போகுது போலையே!

Lokesh Kanagaraj: லோகேஷ் கனகராஜ் மற்றும் சூர்யா கூட்டணியில் ரோலக்ஸ் என்ற கேரக்டரை வைத்து ஒரு முழு படம் அல்லது மீண்டும் இரும்பு கை மாயாவி. இந்த இரண்டில் ஒன்று ஏதாவது நடந்தே ஆக வேண்டும் என்பதுதான் தமிழ் […]

Lokesh Kanagaraj: லோகேஷ் கனகராஜ் மற்றும் சூர்யா கூட்டணியில் ரோலக்ஸ் என்ற கேரக்டரை வைத்து ஒரு முழு படம் அல்லது மீண்டும் இரும்பு கை மாயாவி.

இந்த இரண்டில் ஒன்று ஏதாவது நடந்தே ஆக வேண்டும் என்பதுதான் தமிழ் சினிமா ரசிகர்களின் ஆசையாக இருந்தது.

ஆனால் அதை எல்லாம் தாண்டி வேறொரு அப்டேட் உடன் இந்த கூட்டணி விரைவில் வர இருக்கிறார்கள். சூர்யாவுக்கு காமெடி வரும் என்பதை நிரூபித்து காட்டியது இயக்குனர் பாலா என்றால் நெகட்டிவ் ரோலில் பிச்சி உதறுவார் என காட்டியது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான்.

குத்து மதிப்பா பார்த்தா கூட அஞ்சு நிமிஷம் கம்மியாகத்தான் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கேரக்டர் வந்திருக்கும். ஆனால் இன்று வரை சூர்யாவுக்கு அந்த படம் பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

சூர்யா மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் விரைவில் இணைந்து இன்னொரு படத்தில் பணி புரிய இருக்கிறார்கள். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் கேப்டன் மில்லர் திரைப்படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்த படத்தை இயக்குகிறார்.

அப்போது லோகேஷ் கனகராஜ் என்ன செய்வார் இந்த படத்தில் என எல்லோருக்கும் தோன்றலாம். லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாக போவதே இந்த படத்தில் தானாம். இதில் சூர்யாவுக்கு கேமியோ ரோலா அல்லது வேறு ஏதும் கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்பது இனிதான் தெரிய வரும்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.