வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நாகினி 6க்கு போட்டியாக சன் டிவியில் புத்தம் புது ஹாரர் சீரியல்.. கைகோர்த்த எம்டன் மகன்

New Horror Sun TV serial: சீரியல் என்றாலே அது சன் டிவியின் சீரியல் தான் என சின்னத்திரை ரசிகர்கள் கெத்து காட்டுகின்றனர். அந்த அளவிற்கு தரமான கதைக்களத்துடன் வித்தியாச வித்தியாசமான சீரியல்களை சன் டிவி தொடர்ந்து ஒளிபரப்பு செய்கிறது. அந்த வகையில் இப்போது புத்தம் புதிதாக ஒரு திரில்லர் சீரியல் ஒளிபரப்ப உள்ளதால் ரசிகர்கள் ஆரவாரத்துடன் காத்திருக்கின்றனர்.

இப்போது ஹாரர் சீரியல் என்றால் அது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் நாகினி 6 தான். ஏனென்றால் சில வருடங்களாகவே சன் டிவியில் ஹாரர் சீரியல்கள் எதுவுமே ஒளிபரப்பாகாமல் இருந்த நிலையில், இப்போது திரில்லர் பிரியர்களுக்கு பிடிக்கும் விதமாக நாகினிக்கு டஃப் கொடுக்கும் வகையில் ‘அனாமிகா’ என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது.

இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. எப்போதுமே டிஆர்பி-யின் முதல் 5 இடத்தை சன் டிவி சீரியல்கள் தான் தட்டி தூக்கும். அந்த வகையில் சன் டிவியின் அன்பே வா சீரியல் இப்போது கிளைமாக்ஸை எட்டியதால், விரைவில் நிறைவடைந்து அதற்கு பதில் அனாமிகா என்ற புதிய சீரியலை ஒளிபரப்ப போகின்றனர்.

Also Read: சிங்கப்பெண்ணே: கையும் களவுமாக சிக்கிய மித்ரா.. திருடனுக்கு தேள் கொட்டியது போல் ஆன நிலைமை

சன் டிவியின புத்தம் புது ஹாரர் சீரியல்

இந்த சீரியலில் நடிகை அக்ஷதா தேஷ்பாண்டே கதாநாயகியாக சின்ன திரையில் என்ட்ரி ஆகிறார். ஏற்கனவே சன் டிவியின் சிங்க ப்பெண்ணே, எதிர்நீச்சல், கயல், சுந்தரி போன்ற சீரியல்கள் நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில், புதுவரவான அனாமிகாவிற்கும் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் எல்லாரும் நல்லா இருக்கணும் என ஆசைப்படும் கதாநாயகி அனாமிகா, ஆசைப்படக்கூடாது என சொல்லி சொல்லி வளர்க்கப்படும் நந்தா மற்றும் நல்லதோ கெட்டதோ ஆசைப்படற எல்லாத்தையும் அனுபவிக்கணும் என்று நினைக்கும் ரிஷி என இவர்கள் மூன்று பேரையும் வைத்து விதி எப்படி விளையாடுகிறது என்பதுதான் இந்த சீரியலின் கான்செப்ட் என்று, இந்த ப்ரோமோவை பார்த்ததுமே தெரிந்து விட்டது.

இதோடு ஒரு பேயும் ‘எனக்கு அந்த உயிர் வேண்டும்’ என்று ப்ரோமோவின் கடைசி நிமிஷத்தில் பயமுறுத்துகிறது. இந்த நந்தா கேரக்டரில் நடிக்கும் நடிகர் யார் என்றால், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் எம்டனின் கடைக்குட்டியான கதிர் தான். இந்த சீரியல் நிச்சயம் தற்போது கலர்ஸ் தமிழில் மிரட்டிக் கொண்டிருக்கும் நாகினி 6 சீரியலுக்கு கடும் போட்டியாக இருக்கும்.

சன் டிவியின் புத்தம் புது திரில்லர் சீரியல் ‘அனாமிகா’ 

anamika-new-sun-tv-serial-cinemapettai-1
anamika-new-sun-tv-serial-cinemapettai-

Also Read: வெல்லம் தின்பது ஒருத்தன், விரல் சூப்புவது ஒருத்தனா?. கதிரை கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கும் ராஜி

Trending News