புதன்கிழமை, ஜனவரி 15, 2025

உங்க பொழப்ப கெடுக்க மாட்டேன், பொழச்சி போங்க.. கமல் மறைத்த குணா ரகசியம், அம்பலப்படுத்திய பிரபலம்

Actor Kamal-Gunaa: 32 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த கமலின் குணா இப்போது திடீர் ட்ரெண்ட் ஆகி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் மலையாள படமான மஞ்சுமல் பாய்ஸ் தான். தற்போது 100 கோடியை வசூலித்து மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் குணா தான் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

அதனாலேயே ரசிகர்கள் இப்போது இரு படங்களையும் கொண்டாடி வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் குணா படம் பற்றிய பல விஷயங்களும் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதில் ஒன்று தான் அப்படத்தின் ஒளிப்பதிவாளர் வேணு வெளியிட்டுள்ள ஒரு ரகசியம்.

அவர் ஒரு பேட்டியில் குணா படத்தை இயக்கியது சந்தான பாரதி கிடையாது என்ற உண்மையை போட்டு உடைத்துள்ளார். தற்போது பல சேனல்களுக்கும் பேட்டி கொடுத்து வரும் குணா பட இயக்குனர் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

Also read: மஞ்சுமல் பாய்ஸ்ஸ விடுங்க குணா படமே ஹாலிவுட் காப்பி தான்..! கமலை வறுத்தெடுக்கும் பிரபலம்

அதில் குணா குகையின் ஆபத்து பற்றி தான் அறிந்திருக்கவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார். அதை பற்றி கூறியிருக்கும் வேணு அவர் படத்தை இயக்கியிருந்தால் தான் அந்தக் குகை எவ்வளவு ஆபத்தானது என்பது தெரிந்திருக்கும். அவர் பாதி நாட்களுக்கு மேல் படப்பிடிப்புக்கு வரவில்லை.

கமல் தான் அந்த படத்தை முழுவதுமாக முடித்தார். மிக குறைந்த ஆட்களை வைத்து தான் நாங்கள் இப்படத்தை ஷூட் செய்தோம். அப்படி பார்த்தால் அந்த இடத்தில் வராத அவர் எப்படி அதன் ஆபத்தை அறிந்திருக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார். இதன் மூலம் கமல் மறைத்திருந்த ரகசியம் தற்போது வெளிப்பட்டுள்ளது.

இப்படம் மட்டுமல்ல பல படங்களை கமல் மறைமுகமாக இயக்கினார் என்ற செய்தி இருக்கிறது. ஆனால் அதை கமல் என்றுமே வெளிகாட்டிக் கொண்டதில்லை. இதை பார்க்கும் போது அன்பே சிவம் படத்தில் வரும் உங்க பொழப்ப நான் கெடுக்க மாட்டேன் பொழச்சி போங்க என்ற வசனம் தான் நினைவுக்கு வருகிறது.

Also read: பித்து பிடித்த குணா, ஒரே படத்தோடு காணாமல் போன அபிராமி.. ஜோதிகா, நக்மாவின் உறவா.?

Trending News