திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

எட்ட முடியாத உயரத்தில் ரஜினி, விஜய்க்கு போட்டி அந்த நடிகர் தான்.. வெளிப்படையாக பேசிய பிரபலம்

Rajini, Vijay: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் மூலம் இமாலய வெற்றி கொடுத்திருக்கிறார். இந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அடுத்த அடுத்த படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த சூழலில் பிரபலம் ஒருவர் விஜய்க்கு போட்டி ரஜினியோ, அஜித்தோ இல்லை என்பதை கூறியிருக்கிறார்.

சினிமாவைச் சார்ந்த பல விஷயங்களை பகிர்ந்து கொள்பவர் தான் ரவீந்திரன் துரைசாமி. இவர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த நிலையில், ஜெயிலர் படத்தின் மூலம் ரஜினி எட்ட முடியாத உயரத்திற்கு சென்று விட்டார். 73 வயதாகும் ரஜினி இப்போது இவ்வளவு பெரிய மாஸ் ஹிட் கொடுத்த நிலையில் அவருக்கு போட்டியாக விஜய் எப்போதுமே பார்க்க முடியாது.

Also Read : ஒரிஜினல் சக்சசை ரகசியமாய் கொண்டாடிய ஜெயிலர் படக்குழு.. ஊருக்கு உபதேசம் செய்துவிட்டு ரஜினி பார்த்த வேலை

விஜய்யை விட ஒரு 13 வயது குறைவான சிவகார்த்திகேயன் தான் எப்போதுமே தளபதிக்கு போட்டி. சினிமா, அரசியல் என எந்த பின்புலமும் இல்லாமல் தனது உழைப்பால் மட்டுமே சிவகார்த்திகேயன் இவ்வளவு குறுகிய காலத்தில் மிகப்பெரிய இடத்தை பிடித்திருக்கிறார். விஜய்யின் தந்தை சினிமாவில் இருந்த போதும் அவர் இந்த உயரத்தை பெற பல வருடங்கள் ஆனது.

ஆனால் மிகக் குறுகிய காலத்தில் டாக்டர், டான் என 100 கோடி வசூல் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் கொடுத்திருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் சமீபத்தில் வெளியான மாவீரன் படமும் எதிர்பார்த்த அளவு நல்ல வசூலை தான் ஈட்டியது. இப்போது வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கிய இடம் சிவகார்த்திகேயனுக்கு இருக்கிறது.

Also Read : ரஜினி, விஜய்யை விட மிக மிக சொற்ப சம்பளம் பெறும் சூப்பர் ஸ்டார்ஸ்.. மம்மூட்டிக்கு கூட இவ்வளவுதானா?

ரஜினி மற்றும் அஜித் போன்ற நடிகர்கள் விஜய்க்கு போட்டியாக வர வாய்ப்பே இல்லை. கண்டிப்பாக சிவகார்த்திகேயன் விஜய்க்கு கடும் போட்டியாக இருக்கப் போகிறார். அதோடு மட்டுமல்லாமல் ஜெயிலர் வசூலை லியோவால் கண்டிப்பாக முறியடிக்க முடியாது என்றும் அந்த பேட்டியில் ரவீந்திரன் துரைசாமி கூறியிருக்கிறார்.

ஏனென்றால் எதிர்பார்த்ததைவிட பல மடங்கு ஜெயிலர் வசூலை வாரி குவித்து உள்ளது. என்ன தான் விஜய்யின் லியோ படத்திற்கு எதிர்பார்ப்பு கூடுதலாக இருந்தாலும் ஜெயிலர் வசூலை முந்த முடியாது என ஆணித்தரமாக சொல்லி இருக்கிறார். இப்போது அவர் பேசிய வீடியோ விஜய் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read : அம்மாடியோ! ஜெயிலர் ஓடிடி உரிமை இத்தனை கோடியா.? தட்டி தூக்கிய நிறுவனம், ரிலீசில் ஏற்பட்ட சிக்கல்

Trending News