வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பிக் பாஸ்க்கு வந்து பெயரை கெடுத்துக்க போகும் பிரபலம்.. அடுத்த லாஸ்லியா இவங்கதான்

இன்று விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்6 நிகழ்ச்சியானது மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது. இதனைத் தொகுத்து வழங்கும் உலகநாயகன் கமலஹாசன் பிக்பாஸ் சீசன் 6ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்களை ஒவ்வொருவராக அறிமுகம் செய்யப் போகிறார்.

இதில் 20 போட்டியாளர்களை தேர்வு செய்திருக்கின்றனர். அதில் ஒருவர் எந்த பிரபலமும் இல்லாமல் பொது மக்களிடமிருந்து ஒருவராக இருக்க போகிறார். அவரது பெயர் தனலட்சுமி என்றும் ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருக்கிறது.

Also Read: பிக் பாஸ் சீசன்-6 களமிறங்கும் 20 போட்டியாளர்களின் மொத்த லிஸ்ட.. வேட்டையாட காத்திருக்கும் ஆண்டவர்

இன்னிலையில் ஒவ்வொரு சீசனிலும் இலங்கையை சேர்ந்த பிரபலம் ஒருவர் கலந்து கொள்வது வழக்கம். அதேபோன்று இந்த சீசனிலும் இலங்கையை சேர்ந்த தொகுப்பாளினி ஒருவர் கலந்து கொள்கிறார். இதுவரை நடந்து முடிந்த ஐந்து சீசன்களில் இலங்கையை சேர்ந்த பிரபல தொகுப்பாளினி லாஸ்லியா மற்றும் மாடல் தர்ஷன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இவர்கள் இருவரும் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இருப்பினும் லாஸ்லியா மட்டும் அதே சீசனில் கலந்து கொண்ட கவினை காதலித்து பிறகு அவருடைய அப்பாவிடம் பிக்பாஸ் நிகழ்ச்சிலேயே திட்டு வாங்கினார்.

Also Read: பிக்பாஸ் வீட்டிற்குள் நமிதா போல செல்லும் அடுத்த திருநங்கை.. பத்து நாளாவது தாக்கு பிடிப்பாங்களா!

என்னதான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு லாஸ்லியாவுக்கு சினிமாவில் ஒரு சில பட வாய்ப்புகள் கிடைத்தாலும் அவருக்கு இருந்த பெயரைக் கெடுத்துக் கொண்டார் என்றுதான் சொல்லவேண்டும். இந்த சூழலில் தற்போது பிக் பாஸ் சீசன் 6ல் இலங்கையை சேர்ந்த பிரபல தொகுப்பாளினி ஜனனி ஒரு போட்டியாளராக களமிறங்குகிறார்.

bb-janani-cinemapettai
bb-janani-cinemapettai

செம க்யூட்டாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் ஜனனிக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவர் இந்த சீசனில் கலந்து கொள்வதன் மூலம் மேலும் பலருக்குப் பரிச்சயமான சினிமா கேரியர் கிடைக்கவேண்டும் என்பதற்காகவே கலந்துகொள்கிறார்.

Also Read: பிக்பாஸ் வீட்டுக்குள் களமிறங்கும் விவாகரத்து நடிகர்.. அப்ப ஒரு லவ் ஸ்டோரி கன்ஃபார்ம்

ஆனால் லாஸ்லியா போல் இவரும் தன்னுடைய பெயரை கெடுத்துக் கொள்ளாமல் இருந்தால் சரிதான் என்றும் சிலர் சோசியல் மீடியாவில் கருத்து தெரிவிக்கின்றனர். எனவே இன்று துவங்கும் இருக்கும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி குறித்து சின்னத்திரை ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Trending News