திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

உலக நாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்த போட்டியாளர்.. பல மில்லியன் குழந்தைகளின் வாழ்வாதாரமே இவர்தானாம்

உலகம் முழுவதும் விளையாட்டு வீரர்களுக்கு என்று தனித்தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதிலும் போர்ச்சுகீசிய கால்பந்து அணியின் தலைவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, சச்சின், விராட் கோலி உள்ளிட்டோருக்கெல்லாம் உலகெங்கும் ரசிகர்கள் உள்ளனர்.

அந்த வகையில் இப்போது ஸ்போர்ட்ஸ் மேன் ஒருவர் உலக நாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். அதுமட்டுமின்றி இவர்தான் பல மில்லியன் குழந்தைகளின் வாழ்வாதாரமாகவே இருப்பது பெரும் வியப்புக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

Also Read: அர்ஜென்டினா வெற்றிக்கும் கமலின் பிளாக்பஸ்டர் ஹிட்டுக்கும் இப்படி ஒரு கனெக்ஷானா? என்னமா யோசிக்கிறாங்க!

22-வது உலக கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணியிடம் மோதினர். மிகப் பரபரப்பான ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி வெற்றி கோப்பையை பிரான்சிடம் இருந்து பறித்துச் சென்றது.

இது அர்ஜென்டினா அணியின் மூன்றாவது உலக கோப்பை வெற்றியாகும். இந்த வெற்றியின் கதாநாயகன் அர்ஜென்டினாவை சேர்ந்த லியோனல் மெஸ்ஸி. இப்போது மெஸ்ஸி 900 மில்லியன் யூரோக்களை சம்பாதித்து இருக்கிறார். இதனால் யுனெஸ்கோவின் அறக்கட்டளையின் வருவாயில் 48%, அதாவது கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி மெஸ்ஸியின் நன்கொடையில் இருந்து தான் வருகிறது.

Also Read: சொல்லி அடிச்சா கில்லி, மிஸ் பண்ணாம அடிச்சா அது மெஸ்ஸி.. கால்பந்து சாம்ராஜ்யம் உருவானது இப்படித்தான்

அதுமட்டுமின்றி மெஸ்ஸி பாரபட்சம் பார்க்காமல் உலகெங்கும் உள்ள பல நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளை தனியாகவே தனது சொந்த செலவில் உருவாக்கி இருக்கிறார். இதுமட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள 4 மில்லியன் குழந்தைகளின் வாழ்வாதாரமாகவும் மெஸ்ஸி விளங்குகிறார்.

குறிப்பாக அவர்களது கல்வி செலவு அத்தனையும் மெஸ்ஸி தான் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இந்த செய்தி தற்போது உலகெங்கிலும் உள்ள மெஸ்ஸி ரசிகர்களிடம் வைரலாக பேசப்படுவதுடன், அவர்களை கெத்து காட்ட வைக்கிறது. அதேபோன்று மற்ற ஸ்போர்ட்ஸ் பிரபலங்களும் உதவிக்கரம் நீட்டினால் நிச்சயம் ஏழ்மை என்ற வார்த்தையே இருக்காது.

Also Read: சர்ச்சைக்கு பெயர் போன 5 கிரிக்கெட் வீரர்கள்.. சகட்டுமேனிக்கு சண்டைபோட்டு சொந்த நாட்டை கேவலப்படுத்திய பிளின்ஃடாப்

அத்துடன் கல்வியை மட்டும் ஒருத்தருக்கு கொடுத்து விட்டால் நிச்சயம் ஏதோ ஒரு வழியில் அவர்களது வாழ்க்கை முன்னேற்றப் பாதையை நோக்கி சென்றுவிடும். இதை சரியாக புரிந்து கொண்ட மெஸ்ஸி, குழந்தைகளுக்கு அடிப்படை தேவையான கல்வியை கொடுப்பதில் ஆர்வம் காட்டுகிறார். இவருடைய இந்த மகத்தான செயல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது.

Trending News