Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

Allu Arjun : மாமாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்த அல்லு அர்ஜுன்.. பரபரப்பை ஏற்படுத்தும் களம், விஜய்க்கு போட்டியா?

Allu Arjun : மாமாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்த அல்லு அர்ஜுன்.. பரபரப்பை ஏற்படுத்தும் களம், விஜய்க்கு போட்டியா?

தமிழக தேர்தல் முடிவுற்ற நிலையில் இன்னும் சில பகுதிகளில் தேர்தல் பரபரப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் ஆந்திராவில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நடைபெற உள்ள நிலையில் 175 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தலையும் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதன்படி வருகின்றமே […]

தமிழக தேர்தல் முடிவுற்ற நிலையில் இன்னும் சில பகுதிகளில் தேர்தல் பரபரப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் ஆந்திராவில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நடைபெற உள்ள நிலையில் 175 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தலையும் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி வருகின்றமே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆகையால் இன்று 6:00 மணியுடன் பிரச்சாரம் நிறைவு பெற இருக்கிறது. இந்த சூழலில் எதிர்பாராத விதமாக புஷ்பா நாயகன் அல்லு அர்ஜுன் பிரச்சாரத்தில் ஈடுபட்டது சினிமா மற்றும் அரசியலில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.

இந்த முறை ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ், பவன் கல்யாணின் தேசிய ஜனநாயக கூட்டணி, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடுகிறது.

அல்லு அர்ஜுனை பார்க்க திரண்ட மக்கள் கூட்டம்

இந்நிலையில் அல்லு அர்ஜுனனின் மாமாவும் மற்றும் நடிகருமான பவன் கல்யாண் பித்தாபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த சூழலில் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்தர் கிஷோர் வீட்டின் முன் அல்லு அர்ஜுன் வந்து வாக்கு சேகரித்தார். அவரை பார்க்க ஆயிரம் கணக்கான மக்கள் திரண்டு இருந்தனர்.

தன்னுடைய குடும்பத்திற்கு எதிராக இருக்கும் ஒரு அரசியல் கட்சியின் வேட்பாளருக்காக அல்லு அர்ஜுன் வாக்கு சேகரித்தது தான் இப்போது அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால் அல்லு அர்ஜுனை பொறுத்தவரையில் தனது நண்பனுக்காக வாக்கு சேகரிக்க வந்தார்.

ஆனால் அங்கு எதிர்பாராத அளவுக்கு மக்கள் கூட்டம் திரண்டுள்ளது. மேலும் அவர்களது வரவுகையை பார்த்து மகிழ்ச்சி அடைந்த அல்லு அர்ஜுனின் வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் விஜய் போல ஆந்திராவில் அல்லு அர்ஜுனனின் கொடி ஓங்கி பறக்கிறது. இவரும் கட்சி தொடங்கினால் நன்றாகத்தான் இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.