வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

வாய்ப்பு கொடுத்தும் பயன்படுத்திக் கொள்ளாத இயக்குனர்.. கடுப்பான ரஜினி, துரத்தி விட்ட லைக்கா

ரஜினி இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அப்படம் கிட்டத்தட்ட 60 சதவீதம் முடிந்து விட்டது. பாக்கி இருக்கும் காட்சிகளும் விரைவில் முடிக்கப்பட இருக்கிறது. ஏனென்றால் ரஜினி அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

அதைத்தொடர்ந்து இன்னும் சில இயக்குனர்களிடமும் அவர் கதை கேட்டு வருகிறார். ஏற்கனவே அவர் டான் திரைப்படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தியை கதை சொல்ல கேட்டிருக்கிறார். ஆனால் அவர் கூறிய கதை எதுவும் ரஜினிக்கு பிடிக்கவில்லை. ஆனாலும் அவருக்கு பலமுறை வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

Also read: சூர்யா பட இயக்குனரை வளைத்து போட்ட ரஜினி.. தேசிய விருதுக்காக போட்டிருக்கும் பலே திட்டம்

இருப்பினும் அவர் கொடுத்த கதைகள் எதுவும் சூப்பர் ஸ்டாரை கவரவில்லை. அது மட்டுமல்லாமல் சில பெரிய நடிகர்களும் கதையில் நடிக்க இருந்ததால் அதற்கு ஏற்றவாறு அவரால் கதையை சரிவர அமைக்க முடியவில்லை. இதன் காரணமாகவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த அந்த கூட்டணி இணையாமல் போனது. இது ஒரு புறம் இருக்க மற்றொரு முக்கிய காரணமும் சொல்லப்படுகிறது.

அதாவது சிபிச் சக்கரவர்த்தி ரஜினியிடம் ஓவர் ஆட்டிட்யூட் காட்டியிருக்கிறார். இதனால் கடுப்பான சூப்பர் ஸ்டார் லைக்காவிடம் இனிமேல் அந்த பையன் என்னை சந்திப்பதை தவிர்த்து விடுங்கள். அவருடன் பண்ண என்னால் முடியாது என்று ஸ்ட்ரிக்ட்டாக கூறியிருக்கிறார். அதன் பிறகு தான் லைக்கா நிறுவனம் அவரை வேண்டாம் என்று அனுப்பிவிட்டு இருக்கிறது.

Also read: பாட்டு மட்டும் இல்ல போஸ்டரும் காப்பி தான்.. தமன் வெளியிட்ட போஸ்டரால் ரத்தகளரியான சோசியல் மீடியா

ஒரு படம் மட்டுமே இயக்கியவருக்கு இரண்டாவதாக சூப்பர் ஸ்டார் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனாலும் அதை சரிவர பயன்படுத்திக் கொள்ளாமல் அவர் நல்ல வாய்ப்பை கோட்டை விட்டு இருக்கிறார். வளர்ந்து வரும் பல இயக்குனர்களும் சூப்பர் ஸ்டாரை இயக்க வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருக்கும் நிலையில் சிபிச் சக்கரவர்த்தியின் இந்த செயல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் சம்பள விஷயத்திலும் அவர் மிகவும் கரார் காட்டி இருக்கிறார். இப்படி பல விஷயங்கள் பிடிக்காததால் தான் ரஜினி அவரை வேண்டாம் என்று மறுத்திருக்கிறார். பொதுவாக அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் சூப்பர் ஸ்டாரையே கடுப்பாக்கி இருக்கும் இவரை பற்றி தான் இப்போது திரை உலகில் ஒரே பேச்சாக கிடைக்கிறது. இந்த கூட்டணியின் பிரிவிற்கு வேறு சில காரணங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஆட்டிட்யூட் காரணமாக படம் நின்று போனது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also read: இந்தியாவிலேயே அவர்தான் ஒரே சூப்பர் ஸ்டார், மறுத்த 3 பாலிவுட் ஹீரோக்கள்.. மறுப்பு தெரிவிக்காத விஜய்யின் பேராசை

Trending News