வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பிக்பாஸ் வீட்டுக்குள் களமிறங்கும் விவாகரத்து நடிகர்.. அப்ப ஒரு லவ் ஸ்டோரி கன்ஃபார்ம்

சின்னத்திரை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி நாளை கோலாகலமாக ஆரம்பிக்கப்பட இருக்கிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் எந்தெந்த போட்டியாளர்கள் பங்கேற்கிறார்கள் என்பதை பற்றிய விவாதம் தான் சமூக வலைத்தளங்களில் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நமக்கு அறிமுகமான பல பிரபலங்கள் இந்த நிகழ்சசியில் கலந்து கொள்ள இருக்கின்றனர். நாம் எதிர்பார்க்காத பல சர்ச்சை பிரபலங்களும் கலந்து கொள்ள இருப்பதால் விஜய் டிவியின் டிஆர்பி உயரும் என்பதில் சந்தேகமே இல்லை.

Also read:பிக்பாஸ் வீட்டிற்குள் நமிதா போல செல்லும் அடுத்த திருநங்கை.. பத்து நாளாவது தாக்கு பிடிப்பாங்களா!

ஒவ்வொரு வருடமும் பிக் பாஸ் சீசனில் ஏதாவது ஒரு காதல் கதை இருக்கும். அது நிகழ்ச்சியை இன்னும் சுவாரஸ்யப்படுத்தும். அதன் அடிப்படையில் தற்போது விவாகரத்து நடிகர் ஒருவர் இந்த போட்டியில் களமிறங்க இருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு உட்பட சில சீரியல்களில் நடித்தவர் தான் நடிகர் அசீம்.

அதே தொடரில் நடித்த சிவானியுடன் இவர் அதிகமாக கிசுகிசுக்கப்பட்டார். சிவானிக்காக தான் அவர் தன் மனைவியையே விவாகரத்து செய்தார் என்று கூட சில தகவல்கள் பரவியது. அதனாலேயே சிவானி கலந்து கொண்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரை வைல்ட் கார்டு போட்டியாளராக இறக்க விஜய் டிவி திட்டமிட்டது.

Also read:பிக்பாஸ் மூலம் கிடைத்த ஜாக்பாட்.. சினிமாவில் அசத்தல் என்ட்ரி கொடுக்கும் பிரபலம்

ரசிகர்களும் இவருடைய வரவை பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் சில தடங்கல்களின் காரணமாக அவரால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அப்போது கலந்து கொள்ள முடியாமல் போனது. அதன் பிறகு தற்போது கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட அசீம் இந்த சீசனில் அசத்தல் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

பயங்கர ஸ்டைலிஷாக இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை பதிவிட்டு லக்குகளை அள்ளிவரும் இவருக்கு ஏராளமான பெண் ரசிகைகளும் இருக்கின்றனர். அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் ஒரு காதல் மன்னனாக உருவெடுப்பார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதனால் ரசிகர்களை சுவாரஸ்யமாக்கும் வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிச்சயம் இவரால் ஒரு லவ் ஸ்டோரி உருவாகும் என்பதில் சந்தேகம் இல்லை.

Also read:பெரிய மைனாவுக்கு வலை விரித்த பிக்பாஸ் டீம்.. தானாக சிக்கிய சின்ன மைனா

Trending News