வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பொம்பள கமலின் சாம்ராஜ்ஜியத்தை உடைத்த வடிவேலு.. சூழ்ச்சியால் இழந்த பட வாய்ப்பு

Vadivelu: வடிவேலு திறமையால் முன்னுக்கு வந்தவர் என்பதை யாராலும் குறை சொல்ல முடியாது. ஆனாலும் திறமை இருக்கும் இடத்தில் கர்வம் இருப்பது போல பெரிய இடத்திற்கு வந்தவுடன் கொஞ்சம் ஆணவத்தில் வடிவேலு ஆட ஆரம்பித்தார். இதன் முதல் நிலைப்பாடு தன்னை வளர்த்து விட்ட விஜயகாந்தை மேடையில் தரை குறைவாக பேசினார்.

இந்நிலையில் வடிவேலுவின் சக நடிகர்கள் சமீபகாலமாக யூடியூபில் தங்களது மனக்குமரலை கொட்டி வருகிறார்கள். அதாவது தன்னுடன் இருக்கும் சக நடிகர்களை பெரிய அளவில் வடிவேலு வளர விட மாட்டாராம். அதுவும் பெரிய தொகையை வடிவேலு வாங்கிக் கொண்டு சொற்ப பணம் மட்டுமே தன்னுடன் கீழே வேலை பார்க்கும் நபர்களுக்கு கொடுப்பாராம்.

Also Read : வடிவேலுவின் காமெடிக்காக வெற்றி பெற்ற 6 படங்கள்.. இன்றுவரை ட்ரெண்டில் இருக்கும் நகைச்சுவை

இப்படிப்பட்ட வடிவேலு பொம்பள கமல் என்று பெயரெடுத்த நடிகையின் கேரியரியையே சோலி முடித்து விட்டார். அதாவது கமல் எப்பேர்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் பிச்சு உதறுவார். அதேபோல் தான் கமலுக்கு இணையாக நடிகை கோவை சரளாவும் வித்யாசமான கதாபாத்திரங்களில் நடித்து மிகப்பெரிய பெயரை வாங்கியிருந்தார்.

பெரும்பாலும் வடிவேலு மற்றும் கோவை சரளா காம்பினேஷனில் நிறைய படங்கள் வெளியாகி இருந்தது. ஒரு காலகட்டத்தில் நாகேஷ், மனோரமா கூட்டணி எப்படி வெற்றி பெற்றதோ அதற்கு அடுத்தபடியாக வடிவேலு, கோவை சரளா கூட்டணி பட்டையை கிளப்பியது. அதுவும் சில படங்களில் வடிவேலுவை கோவை சரளா ஓவர்டேக் செய்தார்.

Also Read : குழி தோண்டி புதைக்க நினைத்த கூட்டம்.. மீண்டும் நடிகனாக நிரூபித்த ‘மாமன்னன்’ வடிவேலுவின் வெற்றிக்கு காரணம்

எல்லோரும் அவரை புகழ்ந்து பேசுவது வடிவேலுக்கு பிடிக்காத காரணத்தினால் இனிமேல் என்னுடைய படங்களில் கோவை சரளா நடிக்க கூடாது என்று ஸ்ட்ரிட்டாக இயக்குனர்களிடம் கூறிவிட்டாராம். இதனால் நாளடைவில் தமிழ் சினிமாவில் கோவை சரளாவுக்கு வாய்ப்பு குறைய தொடங்கியது.

ஆனாலும் மனம் தளராத அவர் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதன்படி அங்கு அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வர கொடிகட்டி பறந்தார். இப்போதும் கோவை சரளா சென்னை மற்றும் ஹைதராபாத் என மாறி மாறி தான் இருந்து வருகிறார். வடிவேலுவின் சூழ்ச்சியால் கோவை சரளா தமிழ் சினிமாவில் பட வாய்ப்பு இழந்தாலும் தெலுங்கு அவருக்கு கை கொடுத்தது.

Also Read : தன்னை மீறி பாராட்டு வாங்கிய கோவை சரளாவை வச்சு செய்த நடிகர்.. விரக்தியில் பட வாய்ப்பை இழந்த கொடுமை

Trending News