Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

கண்களைக் கலங்க வைக்கும் அப்பா குட்டி..விஜய் ஆண்டனி வெற்றி பெற்றாரா?

கண்களைக் கலங்க வைக்கும் அப்பா குட்டி..விஜய் ஆண்டனி வெற்றி பெற்றாரா?

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகியுள்ள ‘அப்பா குட்டி’படம்,அப்பா – மகள் இடையேயான பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் உணர்ச்சிப்பூர்வமான படைப்பாகும்.
‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’,‘கண்ணை நம்பாதே’போன்ற படங்களை இயக்கிய மு.மாறன் இப்படத்தை இயக்கியுள்ளார்.வழக்கமான குடும்பப் படமாகத் தொடங்கும் கதை,இரண்டாம் பாதியில் எதிர்பாராத எமோசனல் ட்விஸ்ட்களுடன் பயணிக்கிறது.


ஊட்டியில் தனது வளர்ப்பு மகள் தியாவுடன் வாழ்ந்து வரும் சூர்யாவாக விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.மகளின் மீது அளவற்ற பாசம் கொண்ட தந்தையாக அவரது நடிப்பு இயல்பாக அமைந்துள்ளது.குறிப்பாக,மகளின் உடல்நிலை பாதிக்கப்படும் காட்சிகளில் அவர் வெளிப்படுத்தும் தவிப்பும்,பதற்றமும் பார்ப்பவர்களையும் உணர்ச்சிவசப்பட வைக்கின்றன.
சிறுமி லிதன்யா தியா கேரக்டரில் மிகவும் அழகாக நடித்துள்ளார்.


அப்பாவுடன் அவர் பகிர்ந்துகொள்ளும் காட்சிகள் படத்திற்கு உயிரூட்டுகின்றன.ப்ரீத்தி அஸ்ரானியும் தனக்குக் கொடுக்கப்பட்ட கேரக்டரை சிறப்பாகக் கையாண்டுள்ளார்.
முதல் பாதியில் காட்சிகள் சற்று மெதுவாக நகர்ந்தாலும்,இரண்டாம் பாதியில் நீதிமன்றப் போராட்டம் தொடங்கியதும் ஸ்கீரின் ப்ளேயில் விறுவிறுப்பு அதிகரிக்கிறது.குறிப்பாக,வளர்த்த மகளின் உயிரைக் காப்பாற்ற ஒரு அப்பா எவ்வளவு தூரம் செல்லத் தயாராக இருக்கிறார் என்பதை உணர்த்தும் காட்சிகள் மனதைத் தொடுகின்றன.உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதைக்களம் படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கிறது.


இசையமைப்பாளராகவும் படத்தொகுப்பாளராகவும் விஜய் ஆண்டனி தனது பணியைச் சிறப்பாகச் செய்துள்ளார்.‘அப்பாவ போல’,‘ஏன் இந்த பெண்ணுக்கு’பாடல்கள் கவனம் ஈர்க்கின்றன.மொத்தத்தில்,அப்பா – மகள் பாசத்தையும் தியாகத்தையும் அழுத்தமாகப் பேசும் உணர்ச்சிகரமான குடும்ப படமாக ‘அப்பா குட்டி’ அமைந்துள்ளது.

S

Suriya

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.