வெள்ளிக்கிழமை, நவம்பர் 15, 2024

உயிரோடு இருப்பவரையே கொன்ற சக வீரர்.. பீதியில் உறைந்து நண்பனுக்காக அலறி துடித்த டெண்டுல்கர்

புரளி தீயாய் பரவும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் இங்கு ஒரு புரளி காட்டு தீ போல் பரவியுள்ளது. உயிரோடு இருக்கும் ஒரு கிரிக்கெட் வீரரை இறந்துவிட்டார் என்று ஒரு நியூஸ் கிளம்பியது. அதுவும் நம்பத் தகுந்த வட்டாரத்தில் இருந்து வந்ததால் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

ஏற்கனவே கேன்சரினால் அவதிப்பட்ட அந்த கிரிக்கெட் ஆல் ரவுண்டர் இறந்து விட்டார் என்ற செய்தி அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. இதை 100 சதவீதம் எல்லோரும் நம்பினர், ஏனென்றால் அந்த வீரருக்கு இருக்கும் பிரச்சனை தான் காரணம்.

சமூக வலைதளத்தில் நேற்று ட்ரெண்டான அந்த விஷயம் அறிந்து சக கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் “ஆத்மா சாந்தி அடையட்டும்” என ட்வீட் செய்து இருந்தனர். ஆனால் அடுத்த நான்கு மணி நேரத்தில் அந்த கிரிக்கெட் வீரர் இதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்ததால் மொத்த புரளியும் அடங்கியது.

ஜிம்பாவே அணியின் ஆல் ரவுண்டர் ஹீத் ஸ்டிரிக் .இவருக்கு வயது 49. இவர் கடந்த மூன்று வருடங்களாக லிவர் கேன்சர் நோயினால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக தென் ஆப்பிரிக்காவில் பிரபலமான மருத்துவமனையில் ட்ரீட்மென்ட் எடுத்து வந்தார்.

இவர் தனது 2006 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.கடைசியாக ஜிம்பாவே அணிக்கு பவுலிங் கோச்சாக செயல்பட்டு வந்தார். இவர் தான் இறந்துவிட்டார் என்று ஒரு புரளி காட்டுத் தீ போல் பரவியது. அந்த நாட்டு வீரரான ஹென்றி ஒலங்கா தான் இந்த செய்தியை ட்விட்டரில் அறிவித்தார்.

அந்த செய்தி தான் நாடு முழுக்க சென்றடைந்தது. சச்சின் டெண்டுல்கர் காதுகளுக்கு இந்த நியூஸ் கிடைத்தவுடன் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். சச்சின் டெண்டுல்கரும், ஹீத் ஸ்டிரிக்கும் நெருங்கிய நண்பர்கள். விஷயம் கேள்விப்பட்டதும் அலறியடித்து டெண்டுல்கர் போன் செய்து ஹீத் ஸ்டிரிக் உயிரோடு இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்

- Advertisement -spot_img

Trending News