வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஒரே தியேட்டரில் 1000 நாட்களுக்கு மேல் ஓடிய கமலின் ஒரு படம்.. சாதனையை இப்பவும் முறியடிக்க திணறும் நடிகர்கள்

Actor Kamalhassan: நடிகர்கள் பொருத்தவரை எத்தனையோ படங்களில் நடித்து பேரும் புகழையும் சம்பாதித்து இருந்தாலும், அவர்களுடைய கேரியரில் மறக்க முடியாத அளவிற்கு ஒரே ஒரு படம் என்றைக்கும் நிலைத்திருக்கும் படி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும்.
அதுவும் ரீமேக் செய்த படம் தான் அதிக அளவில் வெற்றியை பெற்றிருக்கும்.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த பில்லா திரைப்படம் சினிமா வாழ்க்கையிலே மறக்க முடியாத படமாக வெற்றி வாகை சூடியது. இப்படம் ஏற்கனவே அமிதாப்பச்சன் நடித்த டான் படத்தின் ரீமேக் தான். அதே போல் கமலுக்கும் ஹிந்தியில் இருந்து ரீமேக் செய்யப்பட்ட ஜுக்னு படம் மிகப்பெரிய சாதனை படைத்திருக்கிறது.

Also read: கமல் தயாரிப்பில் கல்லா கட்ட போகும் 6 படங்கள்.. அஜித் கழட்டி விட்டதால் கூப்பிட்டு பட வாய்ப்பு கொடுத்த ஆண்டவர்

அந்த படம் தான் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த குரு திரைப்படம். இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 43 வருடங்கள் ஆகி இருக்கிறது. ஆனால் காலத்துக்கும் மறக்க முடியாத சூப்பர் ஹிட் படமாக சாதனை புரிந்து சினிமா பிரபலங்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதற்கு காரணம் இந்த படம் பல திரையரங்குகளில் 100 நாட்களுக்கும் மேல் ஓடியது.

முக்கியமாக ஒரே ஒரு தியேட்டரில் 1000 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது. தற்போது வரை கமல் 230 படங்களுக்கும் மேல் நடித்த நிலையிலும் இந்த ஒரு படம் தான் கமலின் சாதனை படமாக இருந்து வருகிறது. இது முறியடிக்க பல நடிகர்களும் முயற்சி செய்து வருகிறார்கள்.

Also read: இரவு 3 மணின்னு கூட பாக்கமா அதுக்கு கூப்பிடுவாங்க.. புலம்பித் தவிக்கும் 46 வயது கமல் பட நடிகை

ஆனால் இதை ஓவர் டேக் பண்ண முடியாத காரியமாக தான் இருக்கிறது. இந்த காலத்தில் வெளி வருகிற படங்கள் அனைத்தும் 100 நாட்கள் தொடுவதே குதிரை கொம்பாக இருக்கிறது. அப்படி இருக்கையில் உலக நாயகன் படைத்த சாதனையை யாராலையும் கிட்ட கூட நெருங்க முடியாது.

எப்படி அந்த காலத்தில் கமலுக்கு குரு என்ற படம் மிகப்பெரிய அந்தஸ்தை கொடுத்ததோ, அதே மாதிரி கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படமும் இப்பொழுது மட்டுமல்லாமல்
காலம் கடந்தும் பேசப்பட்டு வரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அந்த அளவிற்கு ஆல்ரவுண்டராக கலக்கி வருகிறார் உலக நாயகன்.

Also read: 78 வயசு வரை நடித்த ஜாம்பவான்.. 3 தலைமுறைகளை பார்த்த கமல் பட நடிகர்

Trending News