வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

1000 தியேட்டர்களில் ரீ ரிலீஸ் ஆகும் ஃபிளாப் மூவி.. தைரியமாக வெளியிடும் புலி தயாரிப்பாளர்

22 வருடங்களுக்கு முன்பு வந்த இந்த படம் சரியாக போகவில்லை. ஆனால் இப்பொழுது அந்தப் படத்தை எடுத்து திரும்பவும் புதுப்பொலிவுடன் வெளியிடுவதற்காக அனைத்து வேலைகளும் நடைபெற்று வருகிறது. இப்பொழுது இந்த மாதிரியான விஷயங்கள் ட்ரெண்டாகி வந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் ரஜினி நடித்து வெளிவந்த பாபா படம் ஏற்கனவே தோல்வி படமாக அமைந்தது. ஆனால் அதை மறுபடியும் எடுத்து ரீ ரிலீஸ் செய்து திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. அதேபோல் தற்பொழுது கமல் அவரின் தோல்வி படமான ஆளவந்தான் படத்தை ரீ ரிலீஸ் செய்வதாக முடிவு செய்துள்ளனர்.

Also read: சூப்பர் ஸ்டாருக்கு மட்டும் ஓகே.. விஜயகாந்தை அசிங்கப்படுத்திய ஹீரோயின்

கலைப்புலி எஸ்.தானு தயாரித்து சுரேஷ் கண்ணா இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த ஆளவந்தான் திரைப்படம் ஆக்சன் திரில்லர் திரைப்படமாக இருந்தது. இந்தக் கதை 1984 இல் கமலஹாசன் எழுதிய தயம் நாவலின் கதையே படமாக எடுக்கப்பட்டது.இந்தப் படத்தில் கமல் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இந்த படத்திற்காக கமல் உடம்பை ஏற்றி மொட்டை போட்டு இந்த மாதிரியான முயற்சிகள் நிறைய போட்டு இருப்பார்.

ஆனாலும் இந்த படம் இவருக்கு பெரிய அளவில் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. மேலும் இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் பெற்றிருந்தாலும் அடுத்த சில ஆண்டுகளில் நேர்மறையான வரவேற்பை பெற்றது . இதனால் இந்த படத்திற்கு தேசிய திரைப்பட விருது கிடைத்தது.

Also read: அப்பாவின் செயல் கொஞ்சம் கூட மகனிடம் இல்லை.. ரஜினி, கமல் படங்களுக்கு யுவன் இசையமைக்காத காரணம் இது தான்

மேலும் கலைப்புலி எஸ்.தானு தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த கர்ணன், அசுரன்,நானே வருவன் இந்தப் படங்களில் மூலம் பெரிய அளவில் வெற்றியை பார்த்தார். அடுத்ததாக இவரின் தயாரிப்பில் வெளிவர இருக்கும் வாடிவாசல் திரைப்படமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

இப்பொழுது எஸ்.தானு அவர்கள் தைரியமாக ஆளவந்தான் படத்தை மறுபடியும் புதிய டிஜிட்டல் ஒளி அமைப்பில் ரீ ரிலீஸ் மூலம் விரைவில் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். மற்றும் இந்தப் படம் 1000கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளனர். மேலும் கமலுக்கு கடைசியாக வந்த விக்ரம் படம் பெரிய அளவில் கை கொடுத்தது போல இந்த படமும் கை குடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: ரஜினி கமலை வளர்த்து விட்ட பிரபலம்.. உயிருக்கு போராடும் நிலையிலும் கண்டு கொள்ளவில்லை

Trending News