திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ரஜினிக்கு நீண்ட நாட்களாக பாட்டில் பிரண்டாக கம்பெனி கொடுத்த நண்பர்.. தினமும் பார்க் ஹோட்டலில் அடிக்கும் லூட்டி

80 காலகட்டத்தில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்தவர் தான் ரஜினிகாந்த். அப்பொழுது இவர் நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இப்பொழுது இவர் நடிப்பையும் தாண்டி  மனமாற்றத்துடன் கூடிய ஆன்மீகவாதியாக மாறி உள்ளார். 

இப்பொழுது ஆன்மீகவாதியாக மாறி உள்ள ரஜினிகாந்த் ஒரு காலகட்டத்தில் செய்யாத சேட்டைகள் மற்றும் அடிக்காத லூட்டிகளே இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு துருதுருவென இருக்கக் கூடியவர். ஸ்டைலிஷ் மன்னனாக வலம் வந்த இவர் எக்கச்சக்க படங்களை கைவசம் வைத்து பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்தார். 

Also Read: பாரதிராஜாவால் திரும்ப எடுக்க முடியாத 6 படங்கள்.. ரஜினியே மறக்க முடியாத பரட்டை-சப்பாணி காம்போ

இந்நிலையில் தினமும் ஷூட்டிங் முடிந்த பிறகு இவரை வேறு ஒரு புது அவதாரத்தில் பார்க்கலாம் என்று கூட இவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். அதுவும் தினமும் நாள் தவறாமல் ஷூட்டிங் முடிந்தவுடன் 6 மணிக்கு எல்லாம் பார்க் ஹோட்டலில் தனது நண்பருடன் ஆஜராகி விடுவாராம்.

அந்த வகையில் பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஜி வெங்கடேஸ்வரன் தான் இவருக்கு பாட்டில் பிரண்டாக பார்ட்டியில் கம்பெனி கொடுப்பவராம். இவர் வேறு யாரும் இல்லை கடந்த ஆண்டு மிகவும் பிரம்மாண்டமாக வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தின் இயக்குனர் மணிரத்தினத்தின் உடன் பிறந்த அண்ணன் ஆவார்.

Also Read: 30 நிமிட பிளாஷ்பேக்கை பார்த்து ரஜினி என்ன சொன்னார் தெரியுமா? பீஸ்ட் விமர்சனத்தால் நெல்சன் படும்பாடு 

இதனைத் தொடர்ந்து இவர் ஜி வி பிலிம்ஸ் என்னும் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அஞ்சலி, நாயகன், தளபதி போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் தளபதி படத்தின் மூலம் அறிமுகமான இவர்கள் சினிமாவையும் தாண்டி இணைபிரியா நண்பர்களாக வலம் வந்தனர்.

தொடர்ந்து படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்து வந்த ரஜினி தனது மன அழுத்தத்தை போக்கிக் கொள்வதற்காக இதுபோன்ற பார்ட்டிகளில் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார்.  இளமை காலத்தில் எந்த அளவிற்கு லூட்டி அடித்தாரோ அதற்கு மாறாக இப்பொழுது ஆன்மீகவாதியாகவே மாறியுள்ளார்.

Also Read: ஆரம்பத்தில் ரஜினி, கமலுக்கும் ஏற்பட்ட போட்டி.. 70, 80களில் விரட்டி விரட்டி குருவிடம் போட்ட சண்டை

Trending News