நயன், த்ரிஷா எல்லாம் ஓரமா நில்லுங்க.. ஒரே வருடத்தில் 2700 கோடி வசூல் அள்ளிய பலே ஹீரோயின் யார் தெரியுமா?

Trisha: நடிகைகள் த்ரிஷா மற்றும் நயன்தாராவுக்கு இடையே நானா நீயா என்ற போட்டியில் நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால் சத்தமே இல்லாமல் இவர்கள் இரண்டு பேரையும் ஓரம் கட்டியிருக்கிறார் ராஷ்மிகா. ஒரு காலகட்டத்தில் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.

அதன் பின்னர் ராஷ்மிகாவின் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது போல் காட்டப்பட்டது.

நயன், த்ரிஷா எல்லாம் ஓரமா நில்லுங்க

இதற்கு காரணம் இணையவாசிகள் சமூக வலைத்தளத்தில் இவரை கிண்டல் செய்ய ஆரம்பித்தது தான்.

ஆனால் கேலி கிண்டல்கள் ஒரு பக்கம் இருந்தாலும் ராஷ்மிகா கடந்த வருடத்தில் ஒரு மிகப்பெரிய சாதனையை செய்திருக்கிறார்.

ஒரே வருடத்தில் தான் நடித்த படங்களின் மூலம் 2700 கோடி வசூல் செய்த ஹீரோயின் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார். விஜயுடன் இவர் சேர்ந்த நடித்த வாரிசு படம் 310 கோடி வசூல் செய்திருக்கிறது.

ரன்வீர் கபூருடன் இவர் இணைந்து நடித்த அனிமல் படம் 900 கோடி வசூல் செய்திருக்கிறது. அதே மாதிரி கடந்த வருட இறுதியில் ரிலீஸ் ஆன புஷ்பா படம் 1500 கோடி கிட்ட வசூல் செய்திருக்கிறது.

என்னதான் ராஷ்மிகா ட்ரோல் மெட்டீரியல் ஆக்கப்பட்டாலும் டாப் ஹீரோக்களின் பேவரட் ஹீரோயின் ஆக இருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை.

Leave a Comment