Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

2027-ல் ஸ்ருதி ஹாசனுக்கு ஜாக்பாட்.. கைவசம் இத்தனை படங்களா?

2027-ல் ஸ்ருதி ஹாசனுக்கு ஜாக்பாட்.. கைவசம் இத்தனை படங்களா?

தென்னிந்திய சினிமாவில் நடிகையாகவும்,பாடகியாகவும் கலக்கி வருபவர் ஸ்ருதி ஹாசன்.தமிழ்,தெலுங்கு,இந்தி எனப் பல மொழிகளில் நடித்து வரும் இவர்,தற்போது அடுத்தடுத்து சுவாரஸ்யமான படைப்புகளைக் கொடுக்கத் தயாராகி வருகிறார்.இவரது நடிப்பில் வெளியாகும் படைப்புகள் அனைத்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.


துல்கர் சல்மானுடன் இணைந்து அவர் முதன்முதலாக நடித்துள்ள ‘ஆகாசம் லோ ஒக்க தாரா’படம் இன்று வெளியாகியுள்ளது.இந்த ஜோடியை ஸ்கீரினில் ஒன்றாகப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


அடுத்ததாக,மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘ட்ரெயின்’படம் டிசம்பர் 4-ம் தேதி வெளியாக உள்ளது.இதில் ஸ்ருதி ஹாசனும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.


மேலும்,2027 பொங்கலுக்கு ரீலிசுக்குத் திட்டமிடப்பட்டுள்ள ‘வேட்டுவம்’படமும் ஸ்ருதி ஹாசனின் அடுத்தடுத்த படங்களின் லிஸ்டில் இடம்பெற்றுள்ளது.
படங்களைத் தாண்டி,அமேசான் பிரைம் வீடியோவுக்காக உருவாகும் வெப் சீரிஸிலும் ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார்.இப்படி சினிமா மற்றும் ஓடிடி என இரண்டு தளங்களிலும் பிஸியாக இருக்கும் ஸ்ருதி ஹாசனுக்கு 2027 முக்கியமான ஆண்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

S

Suriya

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.