திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஷாலுக்கு ஒரு நியாயம், சிம்புவுக்கு ஒரு நியாயமா.? உங்க அட்டகாசத்துக்கு ஒரு முடிவே இல்லையா

சினிமாவின் சிம்பு என்றாலே வம்புதான் என்ற மன நிலை தோன்றும் அளவுக்கு, ஒரு சமயத்தில் அவர் எது பேசினாலும் பிரச்சினையில் முடியும் அல்லது அதை பிரச்சினையாக்கி விடுவார்கள். அதுவும் பத்தாது, முன்பு அவருடைய படங்கள் அனைத்தும் பெரிய பஞ்சாயத்துக்கு இடையில்தான் ரிலீஸ் ஆகும்.

அதிலும் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்(AAA)’ படத்தினால் சிம்புவின் மீது அடுத்தடுத்த புகார் எழுந்து தயாரிப்பாளர் சங்கத்திடம் இருந்து, ரெட்கார்ட் வழங்கப்பட்டது.

ஏனென்றால் 2017 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் கடுமையான நஷ்டத்தை சந்தித்து, அதற்கு முழு காரணம் சிம்பு என்றும் அந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு சிம்பு சரியாக வராமல் படத்தின் பட்ஜெட்டை உயர்த்துவதாக அவர் மீது தயாரிப்பாளர் புகார் அளித்து, அந்தப் பிரச்சனை இறுதியில் ஈஸ்வரன் படம் வரை தொடர்ந்தது.

Also Read: லத்தி படப்பிடிப்பில் மயங்கி விழுந்த விஷால்.. விபத்தின் பின்னணி

AAA படத்திற்காக சிம்புவுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்ட மாதிரி இப்போது விஷால் அதேபோன்று பிரச்சினை செய்துக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்பில் கலந்து கொள்வதில்லை, சரியான நேரத்திற்கு வருவதில்லை என தொடர்ந்து அவர் மீது குற்றச்சாட்டுக்களும் வைக்கப்பட்டு வருகிறது.

ஆனால் அவருக்கு மட்டும் ரெக்கார்ட் கொடுக்கவில்லை. பெரும்பாலும் ஷூட்டிங் போகாமல் படத்தின் பட்ஜெட்டை உயர்த்துவதுடன், கோடிக்கணக்கில் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.

விஷாலிடம் இதைப் பற்றி யாரும் கேட்பதில்லை. ஏனென்றால் பெரும்புள்ளி ஒருவரின் பெயரைச் சொல்லி தப்பித்து விடுகிறார். மேலும் அரசியல் வாரிசு என் நண்பர் என்றும் சொல்லி அவர் மீது சொல்லப்படும் எல்லாம் குற்றங்களிலிருந்து எஸ்கேப் ஆகிவிடுகிறார்.

Also Read: சிம்புவின் நடிப்பில் தொடர்ந்து வரவிருக்கும் 3 படங்கள்.. காற்று வீசும் போதே கஜானாவை நிரப்பனும் தம்பி

இதனால் சிம்பு செய்த தவறை பெரிதாகப் பேசிய கோலிவுட் விஷாலுக்கு மட்டும் இவ்வளவு சலுகை கொடுக்கிறதா என்று கேள்விக்கு எழுப்பப்படுகிறது. அதுமட்டுமின்றி விஷால் பெரும் புள்ளியை பாக்கெட்டில் போட்டுக்கொண்டு செய்யும் அட்டகாசத்தை நெட்டிசன்கள் தோலுரித்துக் காட்டுகின்றனர்.

இவர் தற்போது வினோத் குமார் இயக்கத்தில் லத்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துக்கொண்டிருக்கும் விஷால் அந்த படப்பிடிப்பிலும் மயங்கி விழுந்து தற்போது உடல் நிலையை காரணம் காட்டி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்.

Also Read: அவங்க மூணு பேரும் இருந்தாத்தான் பங்க்ஷன்.. வெந்து தணிந்தது காடு படத்துக்கு துண்டை போட்ட ஐசரி கணேஷ்

Trending News