ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அயலான் 2, கேப்டன் மில்லர் 2 மாதிரி உருவாக உள்ள 20 படங்கள்.. பிரம்மாண்டத்தின் உச்சத்தை தொடப்போகும் இந்தியன் 2, 3

A list of more than 20 upcoming Part 2 movies in Tamil: சகாப்தத்தை கடந்துள்ள தமிழ் சினிமாவில் படங்களுக்கும் பஞ்சமில்லை கதாபாத்திரங்களுக்கும் பஞ்சமில்லை.  வாராவாரம் படங்கள் ரிலீஸ் ஆகி ஏதோ ஒரு கவனத்தை மக்களிடம் ஏற்படுத்திக் கொண்டே தான் இருக்கிறது. முன்னணி நட்சத்திரங்களின் பல படங்கள் வெளிவந்து  ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற நிலையில் இயக்குனர்கள் அதை மீள் உருவாக்கம் செய்து வணிக ரீதியாக வெற்றி பெற முயற்சி மேற்கொண்டு தனக்குரிய இடத்தை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர்.

பெரும் முயற்சி மேற்கொண்டு புதிதாக படம் எடுத்தாலும் கதை என்னுடையது, தலைப்பு என்னுடையது என்கிற சண்டை படத்தை வெளியிட முடியாதபடி தடைக்கல்லாய் நிற்கிறது.  அதற்கு இந்த இரண்டாம் பாகம் எவ்வளவோ மேல் என்று  அரைத்த மாவையே அரைக்கின்றனர்  இந்த இயக்குனர்கள்.

புதிதாக வரவிருக்கும் இருபதற்கு மேற்பட்ட இரண்டாம் பாக படங்களின் தொகுப்புகள் இதோ,

ஜெயிலர் 2 :  கடந்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் வெளிவந்த  ஜெயிலர் வசூலில் 650 கோடியை தாண்டி  மாபெரும் வெற்றி பெற்றது இதனைத் தொடர்ந்து NCU என புது கான்செப்டை உருவாக்கி நயன்தாரா மற்றும் ரஜினிகாந்தின் நடிப்பில் ஜெயிலர் 2 காண ஸ்கிரிப்ட்டை ரெடி பண்ணி வருகிறார் நெல்சன்.

Also read: ஜெயிலர் 2வில் நெல்சனின் சம்பளம்.. பல கோடி அட்வான்ஸ் கொடுத்து லாக் செய்த சன் பிக்சர்ஸ் மாறன்

இந்தியன் 2 மற்றும் 3:  கால தாமதமாகி வரும் இந்தியன் 2 மற்றும் 3 யை இந்த ஆண்டு ரிலீஸ் செய்து ஒரே ஆண்டில் இரு பாகங்களை வெளியிட்டோம் மற்றும் பிரம்மாண்டத்தின் உச்சத்தை தொட்டோம் என்று சாதனை படைக்க துடித்துக் கொண்டிருக்கிறார் கமல்.

LCU கான்செப்ட் உடன் அடுத்த படத்திற்கான துருப்புச் சீட்டை விக்ரம் மற்றும் கைதி படங்களில் வைத்து முடித்து இருந்தார் லோகேஷ் கனகராஜ். விரைவில் இப்படங்களுக்கான பணியை தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார் இயக்குனர் லோகேஷ்.

மேலும் கார்த்தியின் நடிப்பில் தீரன் அதிகாரம் 2 சர்தார் 2 என படங்களின் வரிசை நீண்டு கொண்டே செல்கிறது.

அயலான் 2 மற்றும் கேப்டன் மில்லர் 2 இவை இரண்டும் இப்போதைய வெற்றியை கணித்து அதன் அடுத்த பாகத்திற்கு தயாராகியுள்ளது.

கிளாசிக் திரைப்படங்கள் ஆன 7ஜி ரெயின்போ காலனி போன்றவையும் இந்த பார்ட் டூ லிஸ்டில் இணைந்துள்ளது.  இதைத் தவிர சார்பட்டா2, துப்பறிவாளன்2, டிமான்டிகாலனி 2, சூது கவ்வும் 2,  மாயவன்2, விடுதலை 2, வடசென்னை 2  போன்ற படங்களும் தயாராகியுள்ளது

இதை தவிர ஏற்கனவே இரண்டு பாகங்களை கடந்த வெற்றி படமான ஜிகர்தண்டா மற்றும் அரண்மனை இவை இரண்டும் தனது அடுத்த பாகங்களான ஜிகர்தண்டா ட்ரிபிள் எக்ஸ் அரண்மனை 4 க்கு தயார் செய்து ரிலீஸுக்கு காத்துக் கொண்டிருக்கிறது. இதுவரை பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளி வராத கங்குவா திரைப்படமும் தனது அடுத்த படைப்பிற்கு தயாராகி உள்ளது.

Also read: இந்தியன் 2 கிளைமாக்ஸில் உள்ள ட்விஸ்ட்.. உதயநிதி பட்டையை தீட்டி வரும் அடுத்த பாகம்

Trending News