ட்வயன் பிராவோ மேற்கிந்திய தீவுகளுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷமான வீரர். இவர் பல போட்டிகளை இவரது ஆல்ரவுண்டர் திறமை மூலம் வென்று கொடுத்து இருக்கிறார். ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடி வந்த இவர் இப்பொழுது ஓய்வில் இருக்கிறார். அதிவிரைவாக ஐபிஎல் போட்டிகளில் 500 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் பிராவோ
தற்போது பிராவோவிற்குப் பின் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளை மிரட்டி வருகிறார் இளம் பவுலர் ஒருவர். தன்னுடைய நேர்த்தியான பந்துவீச்சால் அனைத்து நாட்டு வீரர்களை திணறடித்து புது சாதனை படைத்து வருகிறார். இந்த இளம் புயல்.நேர்த்தியாக நான்கு ஓவர் வீசி அதில் இரண்டு, மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணியை நிலை தடுமாற செய்வார்.
24 வயதிலேயே இவ்வளவு சாதனை படைக்கிறார் என்றால் இவர் இன்னும் அனுபவம் பெற்று பந்து வீசினால் பல சாதனைகளை படைப்பார் என முன்னாள் வீரர்கள் கூறுகின்றனர். இப்படி ஒரு பொன்னான வீரரை பெற்றுள்ளது இந்த ஐபிஎல் தொடரில் விளையாடும் குஜராத் டைட்டன்ஸ் அணி..
ஹர்திக் பாண்டியா தலைமையில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாடி வருபவர் ரசித் கான். இவர் தான் இப்பொழுது பிராவோவிற்கு அப்புறம் 500 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்துள்ளார். ஸ்பின் பவுலிங் செய்து ஐநூறு விக்கெட் எடுத்ததில் இவருக்குத்தான் முதலிடம் .
உள்ளூர் போட்டிகள், ஐபிஎல் போட்டிகள், 20 ஓவர் ஐசிசி போட்டிகள் என அனைத்திலும் சேர்த்து இவர் இந்த சாதனையை முறியடித்து இருக்கிறார். இவருக்கு பொற்காலம் என சொல்லப்படுவது 2017 ஆம் ஆண்டு தான். அந்த ஆண்டில் தான் இவர் கிட்டத்தட்ட 85 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்திருக்கிறார்.
இவர் ஐபிஎல் போட்டியில் மூன்று அணிகளுக்காக விளையாடியிருக்கிறார் குஜராத் டைட்டன், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னோ சூப்பர் ஜெயண்ட் போன்ற அணிகளுக்கு பங்காற்றி இருக்கிறார். இந்த சாதனையை இவர் படைப்பதற்கு மொத்தமாக 371 போட்டிகளை எடுத்துக் கொண்டார். இதில் அனைத்து விதமான போட்டிகளும் அடங்கும்.