வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

நயன்தாரா திரிஷா ஆட்டத்துக்கு முடிவு கட்டவரும் நடிகை.. மொத்த கோடம்பாக்கமே விடும் ஜொள்ளு

Nayanthara and Trisha: என்னதான் வயசானாலும் நடிப்பை விட்டு நான் போவதாக இல்லை. என நயன்தாரா மற்றும் திரிஷா போட்டி போட்டுக் கொண்டு வருகிறார்கள். அதிலும் 40 வயது ஆகியும், கல்யாணம் ஆகி இரண்டு குழந்தை இருந்தும் நாங்கள் தான் கெத்து என்று ஓவராக ஆட்டம் போடுகிறார்கள்.

ஆனால் தற்போது இவர்களுக்கு எல்லாம் மொத்தமாக ஆப்பு வைக்கும் விதமாக மலையாளத்திலிருந்து அழகு புதுமையாக ஒரு நடிகை என்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்த நடிகையிடம் எதுவுமே குறை என்று சொல்ல முடியாத அளவிற்கு டான்ஸ், நடிப்பு, அழகு, இளமை என ஹீரோயினுக்கு உண்டான எல்லா அம்சத்துடனும் இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகளுக்கு சவால் விடும் அளவிற்கு சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படம் தூள் கிளப்பிவிட்டது. அந்த நடிகை வேறு யாருமில்லை பிரேமலு என்ற படத்தில் அனைவருக்கும் பரிச்சயமான நடிகை மமீதா பைஜூ.

இந்த படத்தின் மூலம் இவருக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து திரிஷா, நயன்தாரா மற்றும் சமந்தா அனைவரும் அப்படியே ஆட்டம் கழண்டு போய்விட்டார்கள். அந்த அளவிற்கு மமீதா பைஜூ தாக்கம் ரசிகர்களிடம் ஒர்க் அவுட் ஆகிவிட்டது. இவர் நடித்த படம் 100 கோடி வசூலை தாண்டி கேரளாவில் பட்டையை கிளப்பி விட்டது.

புது நடிகைக்கு கைவசம் இருக்கும் படங்கள்

இதனை தொடர்ந்து தமிழ் படங்களிலும் கமிட் ஆகி நடித்து வருகிறார். அதாவது நிகேஷ் ஆர்எஸ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள “ரேபெல்” என்ற படத்தில் கதாநாயகியாக மமீதா பைஜூ நடித்துள்ளார்.

அடுத்ததாக ராட்சசன் படத்தை எடுத்த இயக்குனர் ராம்குமார் கூட்டணியில் இணையப் போகிறார். இவர் அடுத்து விஷ்ணு விஷால் வைத்து ஒரு படத்தை பண்ண போகிறார்.

அதில் ஹீரோயினாக மமீதா பைஜூ தான் நடிக்கப் போகிறார். இதற்கு அடுத்தபடியாக இளம் முன்னணி ஹீரோகளுக்கு ஜோடியாக நடிப்பதற்கு இவரிடம் பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருக்கிறது.

தமிழில் அதிகம் கவனம் செலுத்தி நடிக்கலாம் என்று அனைத்து படங்களுக்கும் ஓகே சொல்லி வருகிறார். இதனால் ஒட்டுமொத்த கோடம்பாக்கமும் இவரை பார்த்து ரசிப்பதற்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Trending News