Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

‘ராமாயணா’ படத்திற்கு வந்த புதிய சிக்கல்.. தடை கோரி நீதிமன்றத்தில் மனு!

‘ராமாயணா’ படத்திற்கு வந்த புதிய சிக்கல்.. தடை கோரி நீதிமன்றத்தில் மனு!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள ‘ராமாயணா’படம் தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது.இதிகாசமான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள சில சீன்கள், மூல ராமாயணத்தின் கதையையும் கேரக்டர்களையும் தவறாகச் சித்தரிப்பதாகக் கூறி,ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இந்த மனுவை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சந்தோஷ் குமார் சோனி தாக்கல் செய்துள்ளார்.டைரக்டர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில்,ராவணன் கேரக்டருக்கு ராமரைவிட அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.மேலும்,ராமர்,சீதை,லட்சுமணன் ஆகியோரின் கேரக்டர்கள் மற்றும் அவர்களது செயல்பாடுகள் வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளவற்றிலிருந்து மாறுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக,ராமரின் வனவாசம்,லட்சுமணன் சூர்ப்பனகையின் மூக்கை அறுக்கும் சம்பவம், தங்க மானைப் பார்க்கும் சீதை ராமரின் பெயரை உச்சரிக்கும் காட்சி உள்ளிட்ட பல்வேறு காட்சிகளுக்கு மனுவில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுபோன்ற காட்சிகள் மத உணர்வுகளையும் பாரம்பரிய நம்பிக்கைகளையும் பாதிப்பதாக மனுதாரர் தனது தரப்பில் தெரிவித்துள்ளார்.


மேலும்,சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி, மகரிஷி வால்மீகியின் ராமாயணத்திற்கு ஏற்ப படத்தை வெளியிட வேண்டும் என்றும்,அதுவரை தியேட்டர்கள் மற்றும் பிற தளங்களில் படத்தைத் திரையிடத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி,படத்தின் மொத்த வருமானத்தில் 50 சதவீதத்தை அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளைக்கு வழங்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளதால் இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? என்பதே தற்போது எதிர்பார்ப்பாக உள்ளது.

S

Suriya

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.