வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய்யை தாக்கி பேசிய ஒட்டு மொத்த கூட்டம்.. அவர் இல்லனா ஜெயிலர் படமே இல்லை என சீக்ரெட்டை உடைத்த பிரபலம்

Jailer Audio Launch: தமிழ் சினிமா வட்டாரம் முதல் ரஜினி ரசிகர்கள் வரை ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினி தொடங்கி தயாரிப்பாளர் கலாநிதி மாறன் வரை நேற்று மற்ற இசை வெளியீட்டு விழாக்களில் பேசாத அளவுக்கு நிறைய விஷயங்களை பேசி இருந்தார்கள்.

ஜெயிலர் படத்தைப் பற்றி பேசியதை விட, சூப்பர் ஸ்டார் பட்டத்தை பற்றியும், அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பதை பற்றிய சர்ச்சைகளுக்கு பதில் சொல்லும் மேடையாகவே நேற்று இருந்தது. சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு பதில் சொல்கிறேன் என்ற பெயரில் மறைமுகமாக எல்லோரும் தாக்கியது தளபதி விஜய்யை தான். இதற்கு காரணம் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கிளம்பிய புரளி தான்.

Also Read:சூப்பர் ஸ்டார் பட்டத்தை துச்சமாக நினைத்து தூக்கி எறிந்த ரஜினி.. நம்பர் ஒன் யாரு, சர்ச்சைக்கு வச்ச முற்றுப்புள்ளி

ரஜினிகாந்த்தும் தன் பங்குக்கு சூப்பர் ஸ்டார் பட்டத்தை நான் எப்போதோ தூக்கி எறிந்து விட்டேன் என்று ஆரம்பித்ததில் இருந்து அவர் சொல்லிய காக்கா பருந்து கதை வரை எல்லாமே மறைமுகமாக விஜய்யை தாக்குவது போலவே இருந்தது. மேலும் அங்கிருந்த மொத்த கூட்டமும் அதற்கு ஆதரவு தெரிவித்து தங்கள் பங்குக்கு ரஜினியை பெருமை பேசுகிறேன் என்ற பெயரில் விஜய்யை மட்டம் தட்டுவது போல் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அத்தனை பேரும் ரஜினிக்கு சோப்பு போடும் விதமாக பேசிக் கொண்டிருந்த நேரத்தில் ஒரே ஒரு நபர் மட்டும் கூட்டத்தில் வித்தியாசமாக விஜய் பற்றி பெருமையாக பேசியதோடு, விஜய் இல்லை என்றால் ஜெயிலர் திரைப்படம் வந்திருக்காது என்பதை மறைமுகமாக சொல்லி, தளபதி விஜய்க்கு மேடையில் நன்றியும் சொல்லி இருந்தார். ரஜினி முன் அவர் இப்படி பேசியது கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது.

Also Read:விஜய்யால் நெல்சனுக்கு ஏற்பட்ட கடும் நெருக்கடி.. தயாரிப்பாளரிடம் ரஜினி சொன்ன ஒத்த வார்த்தை

ஜெயிலர் திரைப்படத்தின் இயக்குனர் நெல்சன் தான் அந்த நபர். தளபதி விஜய் நடித்த பீஸ்ட் பட சூட்டிங் போது தான் நெல்சன் ரஜினிக்கு கதை சொல்ல ரெடியாகிக் கொண்டிருந்தார். அப்போது அவர் ரொம்பவே பயந்து இருக்கிறார். விஜய் நம்பிக்கையாக நீ போய் அவரிடம் கதை சொல்லு, நல்லா இருக்கும் பயப்படாதே என்று நம்பிக்கையோடு பேசி நெல்சனை அனுப்பி வைத்திருக்கிறார்.

நெல்சன் ரஜினியிடம் கதை சொல்லிவிட்டு, சார் நீங்கள் என்னை நம்பினால் மட்டுமே இந்த படத்தை பண்ண முடியும் என்று சொல்லி இருக்கிறார். ஒருவேளை நெல்சன் பயந்து போய் கதையை ஒழுங்காக சொல்லாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக ரஜினி ஓகே சொல்லி இருக்க மாட்டார். நெல்சனுக்கு நம்பிக்கை மற்றும் தைரியம் கொடுத்து அனுப்பிய விஜய்க்கு ஜெயிலர் இசை வெளியீட்டு விழா மேடையில் மனதார நன்றி தெரிவித்திருக்கிறார் அவர்.

Also Read:72 வயதிலும் வரிசை கட்டி நிற்கும் தயாரிப்பாளர்கள்.. ஜெயிலர் மேடையில் விஜய்யை சீண்டிப்பார்க்கும் கலாநிதி மாறன்

Trending News