திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

Simbu : தேவர் மகன் ஸ்டைலில் உருவாகும் தக் லைப்.. 15 வருஷத்திற்கு பின்னால் போன சிம்புவின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

மணிரத்னம், கமல் கூட்டணியில் நாயகன் படத்திற்கு பிறகு உருவாகிறது தக் லைப் படம். இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் மும்பரமாக நடந்து வருகிறது. மேலும் சிம்பு, துல்கர் சல்மான், ஜெயம் ரவி போன்ற பிரபலங்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

மாநாடு படத்திற்கு முன்னதாக உடல் எடை அதிகமாக இருந்த சிம்பு கடுமையான உடற்பயிற்சி மூலம் தனது உடலை குறைத்தார். அதன் பிறகு சிம்பு நடிக்கும் அனைத்து படங்களும் ஹிட்டாகி வந்தது. இந்நிலையில் கமலின் ராஜ் கமல் பிளிம்ஸ் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இது தவிர சிம்பு கமலுடன் இணைந்து தக் லைப் படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பில் உள்ள புகைப்படம் இப்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. அதுவும் இந்த புகைப்படம் தேவர்மகன் ஸ்டைலில் உள்ளது.

தக் லைப் படப்பிடிப்பில் வெளியான புகைப்படம்

thug-life-simbu
thug-life-simbu

அதாவது அதில் எப்படி சிவாஜி மற்றும் கமல் பிணைப்புடன் இருப்பார்களோ அதே போல் தான் தக் லைப் படத்தில் கமல் மற்றும் சிம்பு இருக்கின்றனர். இந்த போஸ்டரில் நடிகை அபிராமியும் இருக்கிறார். விருமாண்டி படத்தில் கமலுடன் நடித்த நிலையில் பல வருடங்கள் பிறகு மீண்டும் இணைந்துள்ளார்.

15 வருஷத்திற்கு பின்னால் போன சிம்பு

simbu
simbu

இதில் சிம்புவின் புகைப்படம் தான் இப்போது இணையத்தில் ட்ரெண்டாக தொடங்கி இருக்கிறது. அதாவது 15 வருஷத்துக்கு பின்னால் சிம்பு எப்படி இருந்தாரோ அதேபோல் உடம்பு ஃபிட்டாக இந்த புகைப்படத்தில் இருக்கிறார். பார்ப்பதற்கு 25 வயது உடையவர் போல் சிம்பு காட்சி அளிக்கிறார்.

இதை பார்க்கும் போது கமலுக்கு மகனாக தக் லைஃப் படத்தில் சிம்பு நடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. மேலும் அந்த புகைப்படத்தில் நாசர், வையாபுரி போன்ற பிரபலங்களும் இடம்பெற்றிருந்தனர். தக் லைப் படத்தை பற்றி அப்டேட் விரைவில் வெளியாக இருக்கிறது.

Trending News