செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கவினை தூக்கி விடும் முரட்டு வில்லன்.. சர்ப்ரைஸ் கொடுத்து திணறடிக்க வரும் மெகா காம்போ

Actor kavin: கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி தனக்கான மேடையை உருவாக்கி அதில் தடம் பதித்து, அதன் மூலம் கிடைத்த வெற்றியின் கணம் தலைக்கு ஏறாமல் மீண்டும் தனது அற்புதமான நகர்வுகள் மூலம் தனக்கான இடத்தை தக்க வைப்பது என்பது அரிதான ஒன்று. இதனை சரியாக செய்து வரும் கலைஞர்களே நிலைத்து நிற்கின்றனர்.

சின்னத்திரையில் வேட்டையனாக அறியப்பட்ட கவின் அவர்கள் பிக்பாஸ் ஷோவில் கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே பிரபலமடைந்தார். இதற்குப் பின் இவர் நடித்த லிப்ட் மக்களிடையே வரவேற்பு பெற்றது.

கணேஷ் பாபு இயக்கத்தில் கவின் அபர்ணா தாஸ் நடித்த டாடா சிறந்த விமர்சனத்தை தாண்டி வசூலிலும் பல மடங்கு லாபம் சம்பாதித்தது. சிங்கிள் தந்தையாக படத்தை தூக்கி நிறுத்தி இருந்தார் கவின். டாடா வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்த படத்தில் தனது சம்பளத்தை உயர்த்தினார் கவின்.

Also read: கோடிகளில் சம்பளத்தை உயர்த்திய டாடா பட கவின்.. மனசாட்சி இல்லையா என வெளுத்து வாங்கிய தயாரிப்பாளர் 

ஜெயிலரின் வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளராக களம் இறங்குகிறார் நெல்சன். முந்தைய படங்களில் தனது உதவியாளராக இருந்த சிவபாலனின் கதைக்கு ஓகே சொல்ல உடனடியாக படத்திற்கான பூஜை போட்டு படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது.

மாரி செல்வராஜ் படத்தில் கவின் கமிட்டாக இருந்தபோது  சிவபாலனின் கதை பிடித்து போக கவின் 06 இல் ஒப்பந்தம் ஆகி  உள்ளார். அனிருத்தின் இசையுடன் கவின் பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் புதிய திருப்பமாக எஸ் ஜே சூர்யாவும் இணைந்து உள்ளார்.

மார்க் ஆண்டனி மற்றும் ஜிகர்தண்டா 2 வெற்றிக்குப் பின் நடிப்பு அரக்கன் எஸ் ஜே சூர்யா இதில் இணைந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.  கவின், பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா தொடர்பான காட்சிகள் மைசூரில் படமாக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு ரிலீசுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  கவின் மற்றும் எஸ் ஜே சூர்யா காம்போ ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது.

Also read:  பிச்சிக்கிட்டு போகும் நெல்சன் சம்பளம்.. ஒரே படத்தால் அட்லீயை ஓரங்கட்டிய பாக்ஸ் ஆபிஸ் கிங்

Trending News