வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

மாமனார், மருமகன் இடையே நடக்கும் போட்டி.. ஒரே நடிகரை டார்கெட் செய்யும் ரஜினி, தனுஷ்

Rajini, Dhanush: ரஜினி மற்றும் தனுஷ் இடையே தற்போது சுமுகமான உறவு இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். ஆனால் கடந்த வருடம் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக அறிவித்திருந்தனர்.

இதை தொடர்ந்து ஐஸ்வர்யா இயக்குனராக தனது பட வேலையில் பிஸியாக இருந்து வருகிறார். அதேபோல் தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ள நிலையில் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கி, நடிக்க இருக்கிறார். இந்த சூழலில் ரஜினியும் இப்போது ஜெயிலர் என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்திருந்தார்.

Also Read : தாத்தா சாயலில் இருக்கும் தனுஷ் மகன் யாத்ரா.. அப்பா, அம்மாவை மிஞ்சிய உயரம், வைரலாகும் ஃபோட்டோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார். இந்நிலையில் லோகேஷின் இயக்கத்தில் விஜய், கமல், கார்த்தி, சூர்யா போன்ற நடிகர்கள் நடித்து விட்டனர். ஆனால் டாப் நடிகர்கள் பட்டியலில் உள்ள அஜித் மற்றும் தனுஷ் ஆகியோர் லோகேஷ் படத்தில் நடிக்கவில்லை.

ஆகையால் இவர்கள் இருவரையும் இணைத்து ஒரு படம் எடுக்க லோகேஷ் திட்டம் தீட்டியிருந்தார். ஆனால் இந்த விஷயம் அறிந்த ரஜினி தன்னுடைய படத்தில் அஜித்துக்கு வெயிட்டான கதாபாத்திரம் கொடுத்து கமிட் செய்ய சொல்லி இருக்கிறார். கண்டிப்பாக ரஜினி மற்றும் அஜித் ஒன்றாக நடித்தால் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும்.

Also Read : பழைய செல்வராகவன் கதையை நோண்டி எடுத்த தனுஷ்.. அஜித் மறுத்ததால் 3 ஹீரோ சப்ஜெக்ட்க்கு தயாராகும் ஹீரோக்கள்

ஆனால் தனுஷ் தன்னுடைய படத்தில் தான் அஜித் நடிக்க வேண்டும் என்று கூறுகிறார். இவ்வாறு அஜித்துக்காக மாமனார் மற்றும் மருமகன் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இறுதியான முடிவு அஜித்தின் கையில் தான் இருக்கிறது. இது போக ரசிகர்கள் முதலில் அஜித் விடாமுயற்சி படத்தை முடிக்கட்டும் என்று கூறி வருகிறார்கள்.

ஏனென்றால் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தற்போது வரை தொடங்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது. ஆகையால் இந்த படத்தை முடித்துவிட்டு தான் அஜித் அடுத்த படம் குறித்து யோசிக்க இருக்கிறார். அதற்குள்ளாகவே இங்கு போட்டா போட்டி நடந்து வருகிறது. மேலும் லோகேஷும் என்ன முடிவெடுக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read : ரஜினி மனதில் இருந்த தமன்னாவை தூக்கி எறிய செய்த கலாநிதி.. ஷூட்டிங்கில் ஒயிட் பியூட்டி செய்த மட்டமான வேலை

Trending News