பொதுவாக 200 ரன்கள் அடிப்பது என்பது அரிதிலும் அரிது. 50 ஓவர் போட்டிகளில், ஏன் டெஸ்ட் போட்டிகளில் அடிப்பதும் மிகவும் கடினம். இப்பொழுது 20 ஓவர் போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை சேர்ந்த ஒருவர் அசால்டாக 200 ரன்களை விளாசியுள்ளார்.
ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் 3 முறை 200 ரன்கள் அடித்துள்ளார், 20 ஓவர் போட்டிகளில் நான்கு முறை சதம் அடித்துள்ளார். ஆனால் இப்பொழுது முதன்முறையாக ஒருவர் 20 ஓவர் போட்டிகளில் 200 ரன்கள் அடித்திருப்பது வியப்பாக உள்ளது.
Also read: முக்கியமான 3 வீரர்களை ஒதுக்கும் இந்திய அணி..கேள்விக்குறியாகும் கிரிக்கெட் கேரியர்
பொதுவாக மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் இமாலய சிக்ஸர்கள் அடிப்பதில் வல்லவர்கள். கிட்டத்தட்ட அவர்கள் விளையாடும் 20 ஓவர் போட்டிகளில் பவுண்டரிகளை விட சிக்ஸர்கள் தான் அதிகமாக இருக்கும். இந்த அணியில் விளையாடக்கூடிய 11 பேரும் பெரிய,பெரிய சிக்ஸர்கள் அடிக்கும் திறமை கொண்டவர்கள்.
அமெரிக்காவில் நடைபெற்று வரும் அட்லாண்டா ஓபன் டி20 தொடரில் ஒரு அணி 20 ஓவர்களில் 326 ரன்கள் குவித்துள்ளது. மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த ரகீம் கார்ன்வால், 77 பந்துகளில் 205 ரன்கள் குவித்துள்ளார். அவர் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் 22 சிக்ஸர்கள் மற்றும் 17 பவுண்டரிகள் விளாசயுள்ளர். இந்த போட்டியில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 266 என்பது குறிப்பிடத்தக்கது.
Also read: சென்னை அணி கோப்பை வெல்ல கமலே காரணம்.. சென்னை கிரிக்கெட் அணியின் கேப்டன் கூறிய தகவல்
ரகீம் கார்ன்வால் மேற்கு இந்திய தீவுகள் அணிக்காக 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ஒரு ஏலியன் போல் காட்சியளிப்பார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார்.
கிட்டத்தட்ட 6.6அடி உயரம் கொண்ட இவர் 130 கிலோ எடை உடையவர். இந்த போட்டி முதல் தரம் வாய்ந்த போட்டி இல்லாத காரணத்தால் இது ரெக்கார்டுகளில் வராது. ஆனால் முதல்முதலாக உள்ளூர் கிரிக்கெட்டில் 200 ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் இந்த மாமிச மலை.
Also read: ஜொள்ளு விடவைக்கும் 5 கிரிக்கெட் தொகுப்பாளர்கள்.. அரேபிய குதிரை போல் காட்சியளிக்கும் மாயந்தி