வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

படத்திற்கு அப்பாற்பட்டு அதிகமாக கெட்ட வார்த்தை பேசும் நடிகர்.. நிஜத்தில் கவுண்டமணியை ஓரம் கட்டிய ஜாம்பவான்

முன்பெல்லாம் சினிமாவில் கெட்ட வார்த்தை பேசுவது என்பது விரும்பத்தகாத ஒன்றாகவே பார்க்கப்பட்டது. மேலும் அது போன்ற வசனங்கள் பெரும்பாலும் பட காட்சிகளில் தவிர்க்கப்படும். ஆனால் இப்போதெல்லாம் ஒரு படத்தில் கெட்ட வார்த்தை பேசுவது என்பது பயங்கர கெத்தாக பார்க்கப்படுகிறது. மேலும் தெரிந்தே நிறைய காட்சிகளில் கெட்ட வார்த்தைகள் பேசுவது போல் அமைக்கப்படுகிறது.

அதுபோன்று காமெடி காட்சிகளில் கூட கெட்ட வார்த்தைகள் தற்போது சேர்க்கப்படுகின்றன. ஒரு சில பாடல்களிலும் அதுபோன்ற அமைந்துவிடுகிறது. ஒரு சில நடிகர்கள் பேட்டிகளில் பேசும் பொழுது கூட தங்களை மறந்து கெட்ட வார்த்தை பேசி விடுகின்றனர். கலகலப்பான நேரங்களில் இது போன்ற பேசும்பொழுது அதை யாரும் பெரிதாக கண்டு கொள்வதில்லை.

Also Read: கவுண்டமணி ஹீரோவாக நடித்த 5 திரைப்படங்கள்.. மார்க்கெட் இழந்ததால் ஜோடி போட்ட ஹீரோயின்

அப்போதைய காலகட்டத்தில் காமெடி நடிகர் கவுண்டமணி அதிகமாக இரட்டை அர்த்தம் வசனங்களை பேசுவார். மேலும் படப்பிடிப்பு தளங்களில் அதிகமாக கெட்ட வார்த்தை பேசுவார் என்று கூட சொல்லுவார்கள். அவரையே மிஞ்சும் அளவுக்கு பிரபல உச்ச நட்சத்திரம் ஒருவர் அதிகமாக கெட்ட வார்த்தை பேசுவாராம். தமிழ் சினிமாவிலேயே திரைப்படங்களுக்கு அப்பாற்பட்டு நிஜ வாழ்க்கையில் அதிகமாக கெட்ட வார்த்தை பேசும் ஹீரோ என்று இவரைத்தான் கோலிவுட் வட்டாரங்கள் சொல்லுகின்றன.

அப்படி சொல்லப்படும் ஹீரோ நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான். 60 மற்றும் 70களில் மொத்த தமிழ் சினிமாவையும் தன் கைக்குள் வைத்திருந்த நடிகர் என்றால் அது சிவாஜி தான். இவர் செட்டில் ஒரு ஜாலியான மூடில் இருந்தார் என்றால் அதிகமாக கெட்ட வார்த்தை பேசுவாராம். ஆனால் அது எதிரே இருப்பவர்களுக்கு கோவத்தை தூண்டுவதாக அமையாதாம். அந்த அளவிற்கு ரொம்பவும் ஜாலியாக கொண்டு போய் விடுவாராம் சிவாஜி.

Also Read: எம்ஜிஆர் உடன் கவுண்டமணி நடித்த ஒரே படம்.. இன்று வரை மறக்காத நக்கல் மன்னன்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனை பொருத்தவரைக்கும் நடிப்பில் எந்த அளவுக்கு சீரியஸாக இருக்கிறாரோ அதைவிட பல மடங்கு ஜாலியாகவும், நட்புடனும் சக நடிகர் நடிகைகளுடன் பழகக் கூடியவர். இதை நிறைய பேர் சிவாஜியின் நினைவாக பேட்டிகளில் சொல்லி இருக்கின்றனர். மேலும் தன்னுடன் பணிபுரிபவர்களுக்கு உதவி செய்யும் குணமும் அதிகமுடையவர்.

தன்னுடைய சக வயது நடிகர்களை தாண்டி ஒரு காலகட்டத்தில் கமலஹாசன், ரஜினிகாந்த், முரளி, விஜய் போன்ற நடிகர்களுடனும் இணைந்து நடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடனும் ரொம்பவும் ஜாலியாக பழகக்கூடிய ஒரு நபராகவே இருந்திருக்கிறார். இதை கமலஹாசன், வடிவேலு. சத்யராஜ் போன்றவர்கள் தங்களுடைய பேட்டிகளில் கூறியிருக்கின்றனர்.

Also Read: 83 வயதில் புது அப்டேட் கொடுத்த கவுண்டமணி.. கைகோர்க்கும் டாப் நகைச்சுவை நடிகர்

Trending News