செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

100 படங்களுக்கு மேல் இசையமைத்து நெஞ்சில் குடியேறிய பிரபலம்.. ஆனாலும் வாய்ப்பு தர மறுக்கும் ரஜினி,கமல்

டைமிங் காமெடியில் கமலுக்கே உச்சநட்சத்திரங்களுடன் கை கோர்க்காத ஒரு இசையமைப்பாளர், கோலிவுட்டின் முக்கிய இயக்குனர்களான மணிரத்னம் மற்றும் ஷங்கர் படத்தில் இதுவரை இசையமைத்ததே இல்லை, ஆனாலும் இந்திய சினிமா இசையமைப்பாளர்கள் லிஸ்டில் இன்று வரை முதல் ஐந்து இடத்தில் இருக்கிறார்.

இன்றைய இளம் இசையமைப்பாளரான அனிருத் ரஜினி, கமல், சங்கர் படங்களுக்கு இசையமைத்து விட்டார். ஆனால் 30 வருடங்களாக இசை ரசிகர்களை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் இந்த இசையமைப்பாளர் இதுவரை இவர்களுடன் பணியாற்றாதது ஆச்சரியமாகவே உள்ளது.கொடுத்த ஒரே இயக்குனர்.. சாதித்து காட்டிய மௌலியின் 5 படங்கள்

Also Read : வயசில சின்னவங்க, இல்லன்னா உங்க கால்ல விழுந்துருவேன்.. 23 வருட ரகசியத்தை மேடையில் பேசிய ரஜினி

இளையராஜா, தேவா, சிற்பி, SA ராஜ்குமார், AR ரகுமான்  என சினிமாவில் அதிக அனுபவம்  கொண்ட இசையமைப்பாளர்கள் கோலிவுட்டில் இருந்த போது, தன்னுடைய 16 வது வயதில் அரவிந்தன் என்னும் திரைப்படத்தில் அறிமுகமானார் யுவன்ஷங்கர் ராஜா. தமிழில் ஹிப் ஹாப் இசை மற்றும் ரீமிக்ஸ் இசையை கொண்டு வந்தவர். தன்னுடைய 25 வது வயதில் 100 படங்களுக்கு இசையமைத்திருந்தார்.

யுவனுக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்த படம் என்றால் செல்வராகவன்-தனுஷின் முதல் படமான துள்ளுவதோ இளமை தான். யுவன் தான் சிப்ராஸ் இன்டர்நேஷனல் அவார்ட் வாங்கிய முதல் இந்திய இசையமைப்பாளர் ஆவார். ராம் படத்திற்கு இவர் இசையமைத்ததற்காக இந்த விருதை வாங்கினார்.

Also Read : ரஜினியை விட ஐந்து மடங்கு சம்பளம் அதிகமாக வாங்கிய கமல்.. எந்த படத்தில் தெரியுமா?

7ஜி ரெயின்போ காலனி, மன்மதன், ராம், புதுப்பேட்டை, பருத்திவீரன், சென்னை 28, கற்றது தமிழ், பில்லா, யாரடி நீ மோகினி, ஆதலால் காதல் செய்வீர், தங்க மீன்கள் போன்ற படங்கள் யுவனின் அடையாளங்கள் என்றே சொல்லலாம். மற்ற இசையமைப்பாளர்களை ஒப்பிடும் போது யுவனுக்கு ரசிகர்கள் அதிகமாகவே இருக்கின்றனர்.

அனிருத், ஜிப்ரான், சந்தோஷ் நாராயணன் போன்ற இன்றைய இசையமைப்பாளர்கள் கூட ரஜினி, கமல் படத்திற்கு இசையமைத்து விட்டார்கள். ஆனால் யுவன் இன்னும் இவர்களுடன் சேர்ந்து பணியாற்றவில்லை. யுவன் தனக்கென ஒரு டீமை செட் செய்து கொண்டார் என்றே சொல்லலாம். செல்வராகவன், வெங்கட் பிரபு, அமீர், ராம் போன்றவர்களின் படங்கள் என்றால் யோசிக்காமல் சொல்லிவிடலாம் யுவன் தான் இசை என்று.  ரஜினி, கமலுக்கு ஓப்பனிங் சாங் என்றால் அது இளையராஜா தான். அவரின் மகன் இவர்களுக்கு இன்றும் இசையமைக்கவில்லை என்பது சற்று கூடுதல் ஆச்சரியம் தான்.

Also Read : அந்த ஹீரோயின் நடித்தாலே ஹிட் தான்.. தமிழ் தெரியாத நடிகையுடன் போராடிய ரஜினி, கமல், பாரதிராஜா

Trending News